"சில பேராவது பலியாக வேண்டும் என்பதே கருணாநிதியின் திட்டம்" - ஜெ.
சென்னை:
மக்களிடம் அனுதாபத்தைப் பெறுவதற்காக சிலரையாவது பலிகொடுக்க வேண்டும் என்று கருணாநிதி திட்டமிட்டார்என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
மேலும் பல போலீசாரும், திமுக தொண்டர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தக் கலவரம் குறித்து விசாரிக்க நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கலவரம் குறித்தும் அதையடுத்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும்விளக்கமளிக்க தமிழக கவர்னர் ரங்கராஜனை முதவ்ர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது.
அவருடன் தலைமைச் செயலாளர் சங்கர், சென்னை போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் மற்றும் பல உயர்அதிகாரிகள் சென்றனர்.
கவர்னரைச் சந்தித்துவிட்டு வந்தபின் கவர்னர் மாளிகையில் முதல்வர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:
கலவரம் பற்றி விசாரிக்க மத்திய அரசு தனியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று திமுககோரியுள்ளது. இது தேவையற்ற ஒன்று. மேலும் மக்களிடம் அனுதாபத்தைச் சம்பாதிக்க பேரணியின்போதுசிலரையாவது பலிகொடுக்க வேண்டும் என்று கருணாநிதி திட்டம் தீட்டியிருந்தார்.
அதற்காக கூலிப்படையையும், ரெளடிகளையும் பேரணிக்கு திமுகவினர் அழைத்து வந்திருந்தனர். இந்தவன்முறைகள் எல்லாம் கருணாநிதியின் வழிகாட்டுதலின் படியே நடத்தப்பட்டது.
கலவரம் ஏற்படுத்தியவர்கள் திமுக ரெளடிகள் தான். மேலும் அதிமுக தொண்டர்களுக்கும் இந்த வன்முறைக்கும்எந்த சம்பந்தமும் இல்லை.
முன்னதாக திங்கள்கிழமை காலையில் கலவரம் பற்றிய மேலோட்டமான தகவல் கவர்னருக்கு அளிக்கப்பட்டது.பிறகு வீடியோ ஆதாரம் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகளும் கவர்னரிடம் அளிக்கப்பட்டன.
பேரணி சென்ற வழியில் உள்ள அயோத்திக்குப்பம் பகுதியிலிருந்து வந்த அடையாளம் தெரியாத சில ரெளடிகளைபோலீஸ் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் இந்த மீனவர் குடியிருப்புக்குள் திமுகதொண்டர்கள் தான் முதலில் புகுந்தனர். இதையடுத்துத் தான் அந்த குப்பத்து ஆட்களுக்கும் திமுகவினருக்கும்இடையே மோதல் மூண்டது.
நான் கொடுத்த விளக்கத்தால் கவர்னர் திருப்தி அடைந்துவிட்டாரா அடையவில்லையா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. தமிழ அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பார்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது கவர்னர் (பாத்திமா பீவி) அளித்த விளக்கத்தை மத்திய அரசுஏற்கவில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதையும் இதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் என்றுஜெயலலிதா பதிலளித்தார்.
போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் தலைவராக உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ராஜகோபாலனை மத்திய அரசுப் பணிக்குஅனுப்புவீர்களா என்று கேட்டதற்கு, முகத்தைத் வேறு பக்கம் திருப்பிக்கொண்டார் ஜெயலலிதா.
இந்நிலையில் பேரணியில் நடந்த கலவரம் குறித்து கவர்னர் ரங்கராஜன் தனது விளக்கத்தை இன்று இரவுக்குள்மத்திய அரசுக்கு அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications