எல்லையில் பாகிஸ்தானின் சுதந்திர தின சண்டை
ஜம்மு:
இந்தியாவின் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் சுந்திரதினத்தை இன்று கொண்டாடியது.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதில் குறித்து இந்திய ராணுவ அதிகாரிகள்கூறியதாவது:
ஜம்மு -காஷ்மீரில் உள்ள 39 எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்நடத்தியது. பொதுமக்கள் வாழும் பல பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தியது.
திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜோப்பால் என்ற இடத்தில் இந்தியராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் சுட்டதில் 1 எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.
விட்டல் என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார். அவர் ராணுவமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த பொதுமக்களில் ஒருவரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் ஜம்முவின் அக்னூர் மற்றும் ஆர்.எஸ். புரா பகுதிகள்மீதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் இதில் உயிரிழப்புஎதுவும் ஏற்படவில்லை.
தோடா மாவட்டத்தில் கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர்கொல்லப்பட்டார். மேலும் கூலா கிராமத்தில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்றுகொண்டிருந்த போது தீவிரவாதிகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கண்ணி வெடியைவெடிக்கச் செய்தனர். இதில் நடராஜன் என்ற ராணுவ வீரகும் ராஜு என்ற வீரரும்காயமடைந்தனர்.
காயமடைந்த ராணுவ வீரர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புரா சப்-செக்டர் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும்,ராணுவத்திற்கும் இடையேநடந்த சண்டையில் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர், 1 சப்-இன்ஸ்பெக்டர்உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
உ.பியில் தீவிரவாதிகள் திட்டம் முறியடிப்பு:
சுதந்திர தின விழாவை குலைக்க திட்டமிட்டிருந்த லக்ஷார்-இ- தொய்பா தீவிரவாதிஇயக்கத்தைச் சேர்ந்தவர்களின் திட்டத்தை கண்டுபிடித்து லக்னோ நகர போலீசார்முறியடித்தனர். 2 தீவிரவாதிளையும் கைது செய்துள்ளனர். . 1 தீவிரவாதிகொல்லப்பட்டார்.
தீவிரவாதிகளிடமிருத்து ஏராளமான வெடிமருத்துகளும் வெடி பொருட்களும்பறிமுதல் செய்யப்ப்டடது.
தீவிரவாதிகளிடம் விசாரணை செய்த போது, இம்ரான் என்ற ஏரியா கமாண்டர்தலைமையில் சுதந்திர தினத்தன்று லக்னோவின் முக்கியமான பகுதிகளில் குண்டு வைக்கதிட்டமிருந்தது தெரிய வந்தது.
கடந்த மே மாதம் அயோத்தியாவில் ஜீப் ஒன்றில் வெடி குண்டு வைத்ததும்இவர்கள்தான் என்று தெரியவந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications