திமுக பேரணி வன்முறை: மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் ஜெ.
சென்னை:
திமுக பேரணியில் நடந்த வன்முறைக்கு யார் காரணம் என்று விளக்கி மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு அறிக்கைஅனுப்பியுள்ளது.
இந்த வன்முறைக்கு காரணம் யார் என்பது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்து அறிக்கைஒன்றை அனுப்பியுள்ளது. அதில், திமுகவினரின் திட்டமிட்ட சதிதான் வன்முறைக்கு காரணம் என்றுகூறப்பட்டுள்ளது.
ஊர்வலம் ஆரம்பித்த உடனே போலீசார் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் திமுக தொண்டர்கள்தகாதவார்த்தைகளால் திட்டிக்கொண்டே வந்தனர் என்றும். சில இடங்களில் போலீசார் மீது செருப்புவீசப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையெல்லாம் தாங்கிக் கொண்டு எல்லையில்லாப் பொருமையுடன் போலீசார் அமைதி காத்து வந்தனர்.இறுதியில் நடந்த கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ கேசட்களும், போட்டோக்களும் வன்முறைக்கு யார்காரணம் என்பதை தெளிவாக விளக்கும்.
மேலும் இந்த வன்முறை திமுக தலைமைையினால் திட்டமிடப்பட்ட வன்முறையாகும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications