பயங்கரவாதத்தை நசுக்குவோம்: வாஜ்பாய் சூளுரை
டெல்லி:
பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்து வரும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா நசுக்கி ஒடுக்கும் எனசுதந்திரதின விழாப் பேருரையில் பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
இதில் கலந்துகொண்ட பிரதமர் வாஜ்பாய், வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக்கொடியைஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில் காஷ்மீர் பிரச்சனை, பாகிஸ்தானின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் மற்றும் பல்வேறுநலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
அதன் விவரம் வருமாறு,
காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் கருத்தை ஏற்கவே முடியாது. இருப்பினும், இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைதொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.
காஷ்மீரில் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்கு "ஜிகாத்" என்றும்"சுதந்திரப் போர்" என்றும் பாகிஸ்தான் சொல்லி வருவது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான்ஆதராவோடு இதில் ஈடுபட்டு வருபவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும், மனிதத்தன்மைக்கும் எதிராகசெயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாக அமர்நாத், கிஷ்ட்வார், தோடா மற்றும் ஜம்மு போன்ற பகுதிகளில் அப்பாவி மக்கள் மீதுஅவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் செய்து வருவதில் புனிதம் எங்கே இருக்கிறது?. இது என்ன சுதந்திரப் போராட்டம்? யாருக்காகஅவர்கள் இதைச் செய்கிறார்கள்?. இந்நிலை நீடித்தால் அதை எந்த நசுக்கி ஒடுக்க இந்தியா தயாராக உள்ளது.
மேலும், பாகிஸ்தான் போரிட விரும்பினால் அவர்கள் ஏன் ஏழ்மைக்கு எதிராகவும், வேலையில்லாத்திண்டாட்டத்தைப் போக்கவும், நோய்நொடிகளைப் போக்கவும் போராடக் கூடாது?
இரண்டு நாடுகளும் தங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை நீக்கி வாணிபம், பொருளாதாரம் மற்றும் மக்கள்தொடர்பில் அக்கரை செலுத்த வேண்டும். அது தான் இந்த துணைக் கண்டத்துக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும்நல்லது.
மேலும் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் வாழும் மக்களின் துன்பங்களையும், வலிகளையும் போக்கமுயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.
காஷ்மீரில் அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.
மேலும் பிரதமர் தனது உரையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications