இன்று கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை துவங்குகிறது. பட்ஜெட் 18ம் தேதி தாக்கல்செய்யப்படுகிறது.
தி.மு.க தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகு அரசியல் களம் படு அனலாக உள்ளது. அதைத் தொடர்ந்துதி.மு.க நடத்திய பேரணியில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்ததும், எரிகிற நெருப்பில்எண்ணையை விட்டது போல உள்ளது.
மேலும், கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது அங்கிருந்து விலகிதி.மு.க ஆதரவு கட்சியாக மாறியுள்ளது.
எனவே கருணாநிதி கைது விவகாரத்தை பெரிய பிரச்சினையாக்க தி.மு.க முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பா.ம.க. ஆதரவுடன் சபையை ஸ்தம்பிக்க வைக்கவும் தி.மு.கவினர் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த முறை தி.மு.கவினர் மிகவும் அமைதியாக நடந்து கொண்டார்கள். வந்ததும், போவதும் தெரியாதவண்ணம் தி.மு.கவினரின் செயல்பாடுகள் இருந்தன. ஆனால் இப்போது அவர்கள் கொந்தளிப்பின் உச்சகட்டத்தில்உள்ளனர். எனவே கூட்டத் தொடர் பல்வேறு சம்பவங்களைக் கொண்டதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையே, வியாழக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுஅது மாற்றப்பட்டு 18ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தி.மு.க எம்.எல்.ஏ. வை.பெருமாளின் திடீர் மறைவையடுத்து சபை கூடியதும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுஒத்திவைக்கப்படும். மீண்டும் வெள்ளிக்கிழமைதான் கூட்டம் நடக்கும்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications