தொடரும் பிஞ்சுக் கொலைகள்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தை அவரது தந்தையால் எரித்துக் கொல்லப்பட்டது. அந்தக் கொடூர மனம்படைத்த தந்தையை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஆனால் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இது இன்னும் தலைவிரித்தாடி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கிராமம் வெப்பனாம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்சிவக்குமார். இவரது மனைவி வளர்மதி. இவருக்கு 17 வயதுதான் ஆகிறது. இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.
கர்ப்பிணியாக இருந்த வளர்மதி கடந்த 7ம் தேதி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் மடமைகண்ணை மறைக்க, காதல் மனைவிக்குப் பிறந்த குழந்தை என்பதையும் பொருட்படுத்தாது குழந்தையை வெறுத்தார்சிவக்குமார்.
குழந்தையைக் கொன்று விடுவதென முடிவு செய்த அவர் கள்ளிப்பாலை குழந்தையின் வாயில் ஊற்றியுள்ளார்.சிறிது நேரத்தில் ஒன்றுமறியாத அந்தப் பிஞ்சு இறந்தது. அத்தோடு நிற்கவில்லை, அந்தக் கொடூர மனிதன்.குழந்தையின் பிணத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்.
கணவரின் பயங்கர செயல் குறித்து அறிந்து பதறிய வளர்மதி உடனடியாக போலீஸில் புகார் செய்தார்.குழந்தையைக் கொன்று விட்டு தலைமறைவாகி விட்டசிவக்குமாரை ஊத்தங்கரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சமீபத்தில்தான் தர்மபுரியில் ஒரு பெண் சிசுக் கொலை தொடர்பாக கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications