இன்ஜினியரிங் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: தமிழக அரசு உத்தரவுக்குத் தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் (டீம்ட் யுனிவர்சிட்டீஸ்) மாநில அரசின் "கவுன்சிலிங்" முறையில்தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களைத் தான் சேர்க்கவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் மற்ற கல்லூரிகளைப் போல "கவுன்சிலிங்" முறையில்தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைத் தான் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதைஎதிர்த்து கோவை அவினாசிலிங்கம், சென்னை ராமச்சந்திரா மற்றும் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சென்னைஉயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

அதில் மாநில அரசின் அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தன. ஆனால் மாநில அரசின்உத்தரவு சரியானதே என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்ததது.

ஆனால், அதற்கு முன்பே அனைத்து இடங்களையும் தாங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்களைக் கொண்டுநிரப்பிவிட்டதாகவும் அரசு தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ள மாணவர்களைச் சேர்க்க பல்கலைக்கழகங்களில் இடம்இல்லை எனவும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கூறின.

இந்நிலையில் மாநில அரசு மற்றும் உயர்நீதி மன்ற உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள் மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், நீதிபதிகள் லகோதி, வெங்கட்ராமரெட்டி ஆகியோர் முன்விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகங்கள் சார்பில் ஹரிஷ் சால்வே வாதாடினார்.

தமிழக அரசு சார்பில் வக்கீல் வேணுகோபால் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,"கவுன்சிலிங்" முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களைத் தான் சேர்க்கவேண்டும் என்ற தமிழக அரசின்உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தனர்.

மேலும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கும்இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+