ராணுவ அதிகாரிகளுக்கு தெகல்கா வழங்கிய விலைமாதர்கள்
டெல்லி:
பாதுகாப்புத்துறையில் நடந்துள்ள ஊழல் தொடர்பான விவரங்களைப் பெறுவதற்காக ராணுவ அதிகாரிகளுக்கு விபச்சாரிகளைஏற்பாடு செய்து கொடுத்ததாக டெகல்கா டாட் காம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக ராணுவ அதிகாரிகளின் பேட்டியுடன் கூடிய வீடியோ ஆதாரங்களைதெகல்கா டாம் காம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பணத்துக்காக இந்த அதிகாரிகள் பல ராணுவ ரகசியங்களைஇந்தத் தளத்தின் நிருபர்களிடம் வெளியிட்டனர்.
இந்த நிருபர்கள் ஆயுதத் தரகர்கள் போல நாடகமாடி ராணுவ ஊழல் தொடர்பான விஷயங்களைக் கறந்தனர். இந்த நிருபர்களிடம்(ஆயுதத் தரகர்கள் என நினைத்து பணம் வாங்கிய) பா.ஜ.கவின் பொருளாளராக இருந்த பங்காரு லட்சுமணனும் சிக்கினார்.அவரது பதவியும் பறிபோனது.
அதே போல ராணுவ ஊழலில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கட்சியின் தலைவர் ஜெயா ஜேட்லிக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் பெர்ணாண்டசும் தனது பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியைக் காலி செய்ய வேண்டியநிலை உருவானது.
தெகல்கா டாட் காம் வெளியிட்ட இந்த ராணுவ ஊழல் குற்றச்சாட்டுக் குறித்து நீதிபதி வெங்கடசாமி கமிஷன் விசாரணை நடத்திவருகிறது. இதனிடம் தெகல்கா டாட் காம் வழங்கியுள்ள எடிட் செய்யப்படாத வீடியோ கேசட்டில் பல விபச்சாரிகளுடன் ராணுவஅதிகாரிகள் சல்லாபத்தில் ஈடுபட்ட காட்சிகளும் உள்ளன.
இந்த விபச்சாரிகளை தெகல்கா டாட் காம் தான் ஏற்பாடு செய்து கொடுத்தது என அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த எடிட்செய்யாத வீடியோவின் நகல்கலை பாதுகாப்பு அமைச்சகத்திடமும் தெகல்கா கொடுத்துள்ளது.
ஊழல் விவரங்கள் குறித்து தகவல் தர ராணுவ அதிகாரிகள் கேட்டதால் தான் அவர்களுக்கு விலை மாதர்களை ஏற்பாடு செய்துகொடுத்தோம் என தெகல்கா டாட் காம் நிருபர்கள் கூறியுள்ளனர்.
விலை மாதர்கள் விவகாரத்தால் இந்த ராணுவ ஊழல் பிரச்சனை இப்போது புதிய வடிவம் பெற்றுள்ளது. தெகல்கா டாட் காம் மீதுநடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்பப்பட்டது. அப்போது பேசிய மத்தியஅமைச்சர் பிரமோத் மகாஜன், இந்த விவகாரத்தில் விலை மாதர்கள் பயன்படுத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அந்த இணையத்தளத்தின் நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications