விநாயகர் ஊர்வலத்தை குலைக்க சதியா?
சென்னை:
சென்னை எழும்பூர் அருகே வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட வாலிபர் தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்தவரா என்பது பற்றியும் இவர் விநாயகர் ஊர்வலத்தை குலைக்கும் சதித்திட்டத்துடன் வந்தாரா என்பதுபற்றியும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள்போன்றவெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வயர்கள், கத்தி, சுத்தியல் போன்ற பொருட்களும்இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் ஆசாத் அலி என்பதும். அவர் விழுப்புரம் அருகேயுள்ளமாசிலாமணி பேட்டையைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. பின்னர் அவர் நீதீமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனக்கு இநத் வெடி பொருட்களை கொடுத்தார்என்று விசாணையின் போது ஆசாத் தெரிவித்தார்.
ஆசாத்தை அவரின் பெற்றோர் இருக்குமிடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்ற போது, அவர்கள் கரூர்அருகேயுள்ள சிந்தாமணி பேட்டைக்கு சென்றது தெரிய வந்தது. சிந்தாமணி பேட்டை சென்று ஆசாத்தின்பெற்றோரை விசாரித்த போது, அவர்கள் ஆசாத் பொறுப்பின்றி சுற்றி வருவதாக புகார் கூறினர்.
ஆசாத் கூறியது போல் சீனிவாசன் என்ற நபரே இல்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆசாத்தொடர்ந்து தவறான தகவல்களையே கூறி வருவதால் அவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்என்ற சந்தேகம் போலீசுக்கு வந்தது.
இந்நிலையில் ஆசாத்திடமிருந்து கைப்பற்ற வெடி பொருட்களை ஆய்வு செய்த வெடி பொருள் நிபுணர்கள், இந்தவெடிபொருட்கள் நாக்பூரில் தயாரிக்கப்பட்டிருப்பதும், இந்த வெடி பொருட்கள் ஒரு கட்டிடத்தையே தகர்க்கும்சக்தி வாய்ந்தவை என்றும் தெரிவித்தனர்.
வெடிபொருள் நிபுணர்களின் இந்த தகவல் ஆசாத் மேல் போலீசார் கொண்டிருந்த சந்தேகத்தை மேலும்வலுப்படுத்தியது. அவர் மீதான வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசாத் அலி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம். விநாயகர் ஊர்வலத்தை குலைக்கும் எண்ணத்துடன்அவர் சென்னைக்கு வந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications