பாரபட்சிமின்றி நடந்து கொள்வேன்: காளிமுத்து
சென்னை:
எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை என்று சட்டசபை சபாநாயகர் காளிமுத்துகூறியுள்ளார்.
எதிர்க்கட்சியின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் முடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சபாநாயகரின்கடமை.
உங்கள் மீது நம்பிக்கை வைத்துத்தான் சபையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், நீங்கள்வாய்ப்பளிக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்தோம். 3 நாட்களாக சாத்தூர் ராமச்சந்திரனுக்கு பேசவாய்ப்பளிக்கப்படவில்லை.
பேச வாய்ப்பளிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியிலில் சாத்தூர் ராமச்சந்திரனின் பெயர் இடம் பெற்றிருந்தும்அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. சபாநாயகர் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தாலும், அவர் பேசஅனுமதிக்கப்படுவதில்லை என்றார் துரைமுருகன்.
இதற்கு பதிலளித்து சட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறுகையில்,
எதிர்க்கட்சியினரை குரலை ஒடுக்க வேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. தன் கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று ஞானசேகரன் என் அறைக்கு வந்து தர்ணா செய்யாத குறையாககேட்டார். அதே போல் போரூர் வரதன், யசோதா ஆகியோரும் என்னிடம் முறையிட்டனர்.
ஆளுங்கட்சி சார்பில் 30, 40 பேர் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர். 11 பேருக்குதான் வாய்ப்பு அளிக்கப்பட்டது.அவர்களுக்கும் 2 மணி 50 நிமிடங்கள் பேசுவதற்குத்தான் வாய்ப்பளிக்கப்பட்டது. திமுக சார்பில் 5எம்.எல்.ஏக்களிக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசினர்.
தமாக சார்பில் 5 எம்.எல்.ஏக்கள் 1 மணி நேரம் 52 நிமிடங்கள் பேசினர். பாமக எம்.எல்.ஏக்கள் 4 பேர் 1 மணிநேரம் 13 நிமிடங்கள் பேசினர். காங்கிரஸ் சார்பில் 3 எம்.எல்.ஏக்களுக்கும், மார்க்சிஸ்ட் சார்பில் 3எம்.எல்.ஏக்களுக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1 எம்.எல்.ஏக்கும் முஸ்லீம் லீக் சார்பில் 1எம்.எல்.ஏவுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
என் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்புக்கும், மரியாதைக்கும் நன்றி. சாத்தூர் ராமச்சந்திரன் நாங்கள் அறியாதவர்அல்ல. பேசும் எம்.எல்.ஏக்கள் மணியடித்ததும், பேச்சை முடித்துக் கொண்டால் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசவாய்ப்பு கிடைக்கும் என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications