மும்பையில் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் வேலை செய்து வந்த 4 தமிழர்கள் சரக்கு ரயில் மோதி பலியானார்கள்.
சம்பவ நாளன்று இந்த 4 பேரும் மேலும் 11 பேரும் வாசை-நயகான் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில்தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்பேது அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தகண்டிவ்லி என்ற இடத்திற்குச் செல்லும் சரக்கு ரணில் இவர்கள் மீது மின்னல் வேகத்தில் மோதியது.
இதில் ஜக்ராஜ், அண்ணாமலை, மகடு மற்றும் பஞ்சமுத்து ஆகிய 4பேரும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இரத்தவெள்ளத்தில் இறந்தார்கள். அவர்களுடன் நடந்து சென்ற மற்ற 11 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
தகவல் அறிந்ததும் ரயில்வே இலாகாவினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications