உரிய நீரை வழங்காத கர்நாடகம்
பெங்களூர்:
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அனைத்து அணைக்கட்டுகளிலும் உள்ளநீரின் இருப்பு குறித்து ஆராய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து காவிரியில் உடனடியாக தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு தமிழகம் கோரிக்கைவிடுத்துள்ளது. தமிழகத்துக்கு சட்டப்படி வழங்க வேண்டிய 205 டி.எம்.சி. நீரை கர்நாடகம் முறையாகவழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு 91.77 டி.எம்.சி. நீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால்,52.59 டி.எம்.சி. நீரைத் தான் கர்நாடகம் வழங்கியுள்ளது.
கர்நாடகத்தில் நிலவும் மிக பயங்கர வறட்சியால் தான் தமிழகத்துக்கு போதிய நீரை வழங்க முடியவில்லை எனகர்நாடகம் கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடகத்தில் மிக மோசமான வறட்சிநிலவுவதாக அம் மாநிலம் கூறுகிறது.
கர்நாடகத்தில் உள்ள காவிரிப் படுகை அணைக்கட்டுகளில் தண்ணீர் அளவு கடந்த 10 ஆண்டுகளில் எப்போதும்இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக உள்ளதாகவும் அம் மாநிலம் தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழகத்திலும் பல்லாயிரணக்கான ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் வாட ஆரம்பித்துள்ளன. இது குறித்துவிவாதிக்க காவிரி நடுவர் மன்றத்தின் கூட்டத்தை உடனே கூட்டுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து வரும் 6ம் தேதி காவிரி நடுவர் மன்றத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை பிரதமர் கூட்டியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் சங்கர், நீர்வளத்துறைச் செயலாளர் ஆகியோரும்,பாண்டிச்சேரி சார்பில் தலைமைச் செயலாளரும் கலந்து கொள்கின்றனர்.
கர்நாடகத்தின் சார்பில் அம் மாநில தலைமைச் செயலாளர் தெரசா பட்டாச்சார்யா, நீர் வளத்துறைச் செயலாளர்ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இக் கூட்டத்தில் கலந்து கொள்ள கேரளத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications