வழக்குகளை முடிக்க தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக, 49விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக சட்டசபையில் சட்ட அமைச்சர் பொன்னையன் பேசும்போது:

கடந்த ஆண்டு வரை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 3.20 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதுபோக, இந்தஆண்டு புதிதாக இதுவரை 1.01 லட்சம் வழக்குகள் சேர்ந்துள்ளன. இவற்றில், 1.85 லட்ச வழக்குகளில் மட்டுமேதீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றத்திலேயே இந்த நிலை என்றால், மற்ற மாவட்ட, பெருநகர நீதிமன்றங்கள் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. மாவட்ட மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் மட்டும் 9.81 லட்சம் வழக்குகள் தற்போது தேங்கிக்கிடக்கின்றன.

இவையெல்லாம் போக, பெரு நகர நீதிமன்றங்களில் சுமார் 67,000 வழக்குகளும், சிறு குற்றவியல் நீதிமன்றங்களில்சுமார் 44,000 வழக்குகளும் தேங்கியுள்ளன.

இவ்வளவு வழக்குகளையும் எப்போதுதான் தீர்த்து வைப்பது என்று யோசித்ததன் விளைவாகத் தோன்றியதுதான்விரைவு நீதிமன்றங்கள். தமிழகம் முழுவதும் 49 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இதில், 30 விரைவு நீதிமன்றங்களை அமைக்க ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மீதி 19விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான உத்தரவை விரைவில் முதல்வர் அறிவிப்பார்.

தமிழகத்தில் ஏற்கனவே 18 மாவட்ட சிறப்பு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெருநகரநீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளுக்கு உதவுவதற்காக, "நீதித்துறை அகாடமி" ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதுஎன்றார் பொன்னையன்.

தங்கள் தொகுதிகளில் நீதிமன்றங்கள் அமைக்கப்படுமா என்று சில எம்.எல்.ஏக்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்தபொன்னையன், "மத்திய அரசிடம் இதற்காகக் கேட்கப்பட்டுள்ள ரூ.1,000 கோடி நிதி கிடைத்தவுடன் இதற்கானபணிகள் ஆரம்பமாகும்" என்று உறுதியளித்தார் சட்ட அமைச்சர் பொன்னையன்.

இவ்வாறு தொகுதிவாரியாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுவிட்டால், 10 வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும்வழக்குகளை 3 வருடங்களிலேயே முடித்து விடலாம் என்றும் பொன்னையன் நம்பிக்கை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+