ரிமாண்ட் கைதிகள் தப்புவதைத் தடுக்க வீடியோ கான்பரன்சிங்
சென்னை:
கைதிகளை சிறையில் இருந்து தண்டனை நீட்டிப்புக்காக கோர்ட்டுக்கு கொண்டுவரும் போது அவர்கள்தப்பிவிடாமல் தடுக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயிலில் இருந்து கைதிகள் தண்டனை நீட்டிப்புக்காக கோர்ட்டுக்கு கொண்டு வரப்படும்போது அவர்கள் சிலசமயங்களில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி விடுவது உண்டு. அவ்வாறு அவர்கள் தப்புவதைத் தடுக்க "தகவல்தொழில்நுட்பத்தின்" உதவியுடன் "வீடியோ கான்பெரன்ஸிங்" என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறதுஎன்றார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறிக்கிட்டு அந்தத்திட்டம் பற்றி விரிவாக விளக்கினார். அவர் கூறியதாவது,
"வீடியோ கான்பெரன்ஸிங்" என்பது தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய முறை. இந்தமுறையில் ஒவ்வொரு கட்டத்திலும் சிறைகளில் உள்ள கைதிகளில் யார் யார் தண்டனை நீட்டிப்பு பெற வேண்டியகைதிகள் பிரித்தறியப்படுவார்கள். பிறகு அவர்கள் அனைவரும் சிறைக்குள்ளேயே ஒரு இடத்தில்அமரவைக்கப்பட்டு வீடியோ மூலம் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதிக்கு காண்பிக்கப்படுவார்கள்.
நீதிபதி அங்கு உட்கார்ந்து கொண்டே குறிப்பிட்ட கைதிக்கு தண்டனை நீட்டித்து தீர்ப்பு வழங்கமுடியும். இதனால்கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதிகள் போலீசார் பிடியில் இருந்து தப்புவது தவிர்க்கப்படும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.
தொடர்ந்து பொன்னையன் பேசுகையில், சிறைகளில் உள்ள கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதாஎன்பதைச் சோதிக்கவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதைத் தடுக்கவும் பல புதிய முறைகள் கடைபிடிக்கப்படும்.
மேலும் கடந்த ஆட்சியில் நல்ல உணவுப்பொருட்கள் வழங்குவதில் ரூ.1 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.அது குறித்து விரைவில் விசாரிக்கப்படும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications