காவிரி நீர் தர கர்நாடகம் மறுக்கவில்லை: ஜெ.
சென்னை:
கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட முடியாது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க காவிரி நதிநீர் ஆணையத்தின் கண்காணிப்பு குழுவை கூட்டவேண்டும் என்று ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார். கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டமத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்று ஜெயலலிதா மத்திய அரசின் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் கண்காணிப்புக் குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி கூட்டப்படும்என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்தார்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவுக்குவுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து தமிழக - கர்நாடக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த அனுமதி தருமாறும் அவர் கிருஷ்ணாவைகேட்டுக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்ற கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கான தேதிகுறித்து பின்னர் அறிவிப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில் கர்நாடகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதால் தமிழத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாதுஎன்று கர்நாடக அரசு கூறியதாக செய்திகள் வந்தன.
இந்த செய்தியை தமிழக முதல்வர் ஜெயலலிதா மறுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று (புதன்கிழமை)சட்டசபையில் கூறியதாவது:
கர்நாடகம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை. தமிழக-கர்நாடகஅதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாக கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி நதிநீர் ஆணையத்தின் கண்காணிப்புக்குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி டெல்லியில்கூட்டப்படவிருக்கிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்காக தமிழகம் காத்திருக்கிறது என்றார் ஜெயலலிதா.
நீர்வள ஆணையக் குழு மேட்டூர் அணையில் முகாம்
இந்நிலையில், மத்திய நீர்வள ஆணையக் குழு மேட்டூர் அணைக்குச் சென்றுள்ளது. மேட்டூர் அணையில் உள்ளதண்ணீரின் அளவு, அணைக்கு வரும் மற்றும் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவுகள் பற்றிப்புள்ளிவிவரங்களை இந்தக் குழு சேர்க்கவுள்ளது.
மேலும், மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீர் எந்த அளவிற்கு விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக விளங்கும்என்பது பற்றியும் ஆராயவுள்ளது இந்தக் குழு.
கோபாலகிருஷ்ணன் தலைமையில் மேட்டூரில் முகாமிட்டுள்ள இந்தக் குழு, 2 நாட்களில் இதுகுறித்து காவிரிநடுவர் மன்றத்திடம் தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications