சசிகலா குடும்பத்தைப் பிரித்ததைப் போலவே கருணாநிதி குடும்பத்தையும் பிரித்தோம் - ஜெ.
சென்னை:
கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அவரை வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டது ஏன் என்றுமுதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.
இந்த திட்டம் தொடர்பாக நடந்த விவாதத்தின் போது திமுக உறுப்பினர் கோ.சி.மணி பேசுகையில், குற்றவாளிகளைநீதிபதி குறிப்பிட்ட சிறையில் அடைக்காமல் வேறு சிறைகளில் அடைக்கும் முறை நிறுத்தப்படுமா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் பொன்னையன், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளே எவ்வாறுபேசுகின்றனர் என்பது நமக்குத் தெரியும். "பிரிசன் மேனுவல்" என்ற சிறை விதிமுறைப்படி, கைதிகளை இடமாற்றம்செய்ய சிறை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய கோ.சி.மணி, எங்கள் தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அவரை சென்னைசிறையில் அடைக்கச் சொல்லி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவரை வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டது. அதேபோல ஸ்டாலினையும் சென்னையிலிருந்து மதுரைக்குக் கொண்டு சென்றார்கள்.இனிமேலாவது இப்படிச் சிறை அதிகாரிகள் விதிகளை மீறுவது கட்டுப்படுத்தப்படுமா என்றார்.
இதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து கூறிய பதில்:
சபையில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பது மரபு. ஆனால் சபைக்கு வராதவரைப் பற்றி உறுப்பினரேபேசுவதால் நானும் பேசுவதில் தப்பில்லை என நினைக்கிறேன்.
கடந்த ஆட்சியில் திருமதி சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்கள். அப்போது தற்செயலாக சசிகலா, அவரது அக்காள் மகன்கள் தினகரன் மற்றும் பாஸ்கரன்ஆகியோர் சந்தித்துப் பேசியதை ஒருவர் கவனித்துவிட்டார்.
அன்றிரவே அவர்கள் 3 பேரும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டார்கள். அப்போது கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள்தான் இப்போதும் கடைபிடிக்கப்பட்டுள்ளன என்று ஜெயலலிதா கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications