டெல்லி:த.மா.கா. தலைவர் மூப்பனாரின் மறைவையடுத்து ராஜ்யசபா வியாழக்கிழமை முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில் மூப்பனாருக்கு அவை கூடியதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.லோக் சபாவில் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவை தொடர்ந்து இயங்கி வருகிறது.