ஸ்டாலின் மனு மீது மனித உரிமை கமிஷன் முடிவெடுக்க இடைக்கால தடை
சென்னை:
சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின் கொடுத்த புகாரின் மீது மாநில் மனித உரிமை கமிஷன் எந்த விதமான இறுதிமுடிவும் எடுக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்டாலின் மனு விவரம்
உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை மீறி முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலிமாறன், டி.ஆர் பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
கடந்த ஜுன் மாதம் 29ம் தேதி இரவில் என் வீட்டிற்கு வந்த போலீதசார் என் குடும்பத்தாரிடம் அநாகரிகமானமுறையில் நடந்து கொண்டனர் என்றும், மனித உரிமையை மீறி நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.
போலீசார் மனு விவரம்
இந்நிலையில் தமிழக உள்துறை செயலாளர் , டிஐ.ஜி, சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில தாக்கல் செய்த ரிட் மனுதாக்கல் செய்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது:
மாநில மனித உரிமை கமிஷனில் ஸ்டாலின் 2 புகார் மனுக்கள் கொடுத்தார். உச்ச நீதிமன்ற விதிமுறைகளை மீறிமுன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைசர்களை கைது செய்யப்பட்டனர் என்றும், அவர் வீட்டிற்கு சென்றபோலீசார் அவரது குடும்பத்தாரிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதகாவும் அவர் தன் புகார் மனுவிவ்கூறியிருந்தார்
இந்த 2 குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு புறம்பானவை. எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி தவைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இநத் விசாரணை க்மிஷனில்கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் கைது விவகாரம் குறித்தும், ஸ்டாலின் குடும்பதிதரிடம் அநாகரிகமான முறையில்போலீசார் நடந்தது குறித்தும் விசாரணை செய்யப்பட உள்ளது.
மனித உரிமை மீறல் குறித்து எந்த குற்றச்சாட்டும இல்லை. எனவே ஸ்டாலின் புகாரை மாநில மனித உரிமைகமிஷன் விசாரிப்பதற்கு அதிகார வரம்பு எதுவும் இல்லை,
ராமன் கமிஷன் வரமபில் ஸ்டாலின் புகார் வரவில்லை என்று மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவுபிறப்பித்துள்லளது. இந்த உத்தரவு சட்ட விரோதமானது,
மாநில மனித உரிமை கமிஷனில் ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும் மாநகராட்சி ஊழியர் மோகன சுந்தரம்ஆகியோர் ஸ்டாலின் புகாருக்கு ஆதரவாக அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். ஸ்டாலினின் தூண்டுதலின்படிதான்இவர்கள் அபிடவிட் தாக்கல் செய்தனர் இதை மனித உரிமை கமிஷன் பரிசீலிக்கவில்லை,
டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை கமிஷனில் ஹென்றி தீபக்என்பவர் கொடுத்த புகாரையும் மாநில மனிதஉரிமை கமிஷன் பரிசீலிக்கவில்லை. தேசிய மனித உரிமை கமிஷன் வரம்பில் கருணாநிதி மற்றும் மற்றவர்கள்கைது செய்யப்படட்து குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
எனவே ஸ்டாலின் கொடுத்த புகாரை மாநில மனித உரிமை கமிஷன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஸ்டாலின்கொடுத்த புகார் விசாரணைக்கு உகந்தது என்று மாநில மனித உரிமை கமிஷன் பிறப்பித்த உத்தரவையும் ரத்துசெய்ய வேணடும்.
இவ்வாறு போலீசார் தங்கள் மனுவில் கூறியிருந்தனர்.
மனித உரிமை கமிஷனுக்கு இடைக்காலத் தடை
இந்த மனு புதன்கிழமை முன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகம் ஸ்டாலின் கொடுத்த புகார் மீது மாநில மனித உரிமை கமிஷன் எந்தஇறுதி முடிவும் எடுக்ககக்கூடாது என்று உததரவு பிறப்பித்தார்.
போலீசார் மனு குறித்து 2 வாரத்தில் பதில் தருமாறு மனித உரிமை கமிஷன் பதிவாளர், மு.க. ஸ்டாலின்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications