டி.வி.எஸ். சுசூகியின் புதிய பைக் "விக்டர்" அறிமுகம்
சென்னை:
விக்டர் என்ற 110 சி.சி. பைக்கை டி.வி.எஸ்-சுசூகி நிறுவனம்இன்று சென்னையில் அறிமுகப்படுத்தியது.
இந்திய நிறுவனமான டி.வி.எஸ். நிறுவனமும், ஜப்பானின் சுசூகி நிறுவனமும் இணைந்து பல வகையான 2 சக்கரவாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் 50 சி.சி. மொபட் முதல் 135 சி.சி பைக்குகள் வகை பல வகையான 2 சக்கர வாகனங்களைதயாரித்து அளித்து வருகின்றன.
இப்போது இந்த நிறுவனம் "விக்டர்" என்ற 110 சி.சி. பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிமுக விழாஇன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.
இந்த புதிய வண்டியை அந்த நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் வேணு சீனிவாசன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இந்த "விக்டர்" என்ற பைக், இந்தியாவில் உள்ள பைக்குகளில் எரிபொருள்சிக்கனத்தில் நம்பர் ஒன் என்று சர்வதேச சோதனை மையம் சான்றிதழ் அளித்துள்ளது.
லிட்டருக்கு 85 கி.மீ. கொடுக்கும் வகையில் இதன் எஞ்சின் பாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 70,000 வண்டிகளை விற்பனை செய்ய வேண்டும் என்றுதீர்மானித்துள்ளளோம்.
அக்டோபர் மாத மத்தியில் இந்தியா முழுவதும் விற்பனையைத் துவக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளளோம்.
அடுத்த நிதி ஆண்டில் இந்த வண்டியின் விற்பனை அளவு 200, 000யைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த வண்டியைத் தயாரிப்பதற்கு ரூ.70 கோடி முதலீடு செய்துள்ளோம். இதன் விலை ரூ.35,000லிருந்து 45,000என நிர்ணயித்துள்ளோம்.
சென்னையில் இந்த வண்டியின் விலை ரூ.41, 187 என்று நிர்ணயிக்கப்ட்டுள்ளது. இருப்பினும் சென்னைக்கும் மற்றநகரங்களுக்கும் விலை மாறுபாடு அதிகமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications