ஹரிபாஸ்கர் வழக்கில் அரசு சாட்சி "பல்டி"
சென்னை:
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ஹரிபாஸ்கர் மீதான வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சாட்சி திடீர் பல்டி அடித்துள்ளார்.
நில ஆணையரின் செயலாளராக பணியாற்றி வரும் தண்டபாணி என்பவர் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகஇருந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்ததில், நானும் சுதிர் ராஜனும் கொடைக்கானலில் சொத்து வாங்கினோம் என்று அவர்கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று(வியாழக்கிழமை) சிறப்பு நீதி மன்றத்தில் வந்தது.
அப்பாது தண்டபாணி தனது சாட்சியத்தில் கூறியதாவது,
நான் ஹரிபாஸ்கரிடம் 1981ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை உதவியாளராகபணியாற்றினேன். எனக்கு சுதிர்ராஜனை யார் என்றே தெரியாது. அவருடன் நான் கொடைக்கானலுக்கும் செல்லவில்லை.
என் மாமியாருக்கு கொடைக்கானலில் நிலம் உள்ளது. எனக்கு கோர்ட் சம்மன் அனுப்பியதால் இங்கு வந்துசாட்சியளிக்கிறேன் என்றார்.
இதையடுத்து அரசு தரப்பு வக்கீல் , தண்டபாணியின் பல்டி அடிப்பதாகக் கூறி அவரிடம் குறுக்கு விசாரணை செய்யஅனுமதி கேட்டார்.
பிறகு நீதிபதி அவருக்கு அனுமதி வழங்கினார். அவர் செய்த குறுக்கு விசாரணையிலும் தண்டபாணி, சுதிர் ராஜனையார் என்றே தெரியாது என்று தொடர்ந்து மறுத்தார். மேலும் போலீசாரிடமும் அவ்வாறு நான்சாட்சியளிக்கவில்லை என்றும் மீண்டும் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications