இராக் ராடார் தளம் மீது அமெரிக்க விமானம் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

இராக்கின் முக்கிய ராடார் தளங்கள் மீது அமெரிக்க விமானங்கள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தின. அமெரிக்கராணுவ தலைமையகமான பென்டகன் இத்தகவலைத் தெரிவித்தது.

இராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள பசாரா துறைமுகத்தில் உள்ள ராடார் தளம் மீது திடீர்த் தாக்குதலை நடத்தியது.

அமெரிக்க விமானங்கள் பறப்பதை வேவு பார்ப்பதற்காக இந்த ராடார் தளம் பயன்படுத்தப்பட்டது. இதற்குப்பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன.

தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய விமானங்கள் அனைத்தும் பத்திரமாக தங்கள் தளத்திற்குத் திரும்பின.

ஆனால் தாக்குதலுக்குள்ளான ராடார் தளம் எந்த அளவிற்குச் சேதமடைந்தது என்பது பற்றிய தகவல் இல்லைஎன்றும் பென்டகன் தெரிவித்தது.

இந்தியக் குழு இராக் சென்றது

இந்நிலையில், இராக்குடன் நட்புறவை மீண்டும் பலப்படுத்த முடிவு செய்த இந்தியா, ஒரு குழுவை இராக்கிற்குஅனுப்பியது.

ராஜ்யசபா துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா தலைமையில், இன்று (வெள்ளிக்கிழமை) பகல் பாக்தாத்திற்குச்சென்றது 81 பேர் கொண்ட இந்தக் குழு.

அமெரிக்கா தடை விதித்துள்ள "நோ பிளை ஸோன்" பகுதி வழியாகத்தான் இந்தக் குழுவினர் பயணம் செய்யும்விமானம் பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+