டான்சி வழக்கு: மேல் முறையீட்டு விசாரணை மீதான தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை ஜெ. மனு
சென்னை:
டான்சி வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனுக்கள் மீது நடத்தப்பட்டு வந்த விசாரணையை உச்சநீதிமன்றம் தடைசெய்ததை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா சார்பில் நாளை (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்யப்படுகிறது.
இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அவர்முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலாஉட்பட அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மொத்தம் 17 அப்பீல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த 17 மனுக்களையும் கடந்த மாதம் 27ம் தேதி முதல் உயர்நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் விசாரித்துவந்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டிருந்த வெங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தனக்கு இந்த வழக்கின் சாட்சிகளை குறுக்கு விாசரணை செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படுவதில்லை.மேலும் இந்த வக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார்.
அதனால் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடப்பது பொது மக்கள் மத்தியில் நீதித்துறை மீதுசந்தேகத்தைக் கிளப்பும்.
எனவே இந்த வழக்கை வேறு ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில்கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச், அந்த அப்பீல் மனுக்கல் மீதானவிசாரணையை தொடர்ந்து நடத்த இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து, ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை ஒரு மனுதாக்கல் செய்யப்படுகிறது.
இந்த அப்பீல் மனுவில், முதல்வராகத் தொடர்வதற்கு இன்னும் இரண்டரை மாதங்களுக்குள் எம்.எல்.ஏவாகவேண்டும் என்பதால், அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைக்கு தடைவிதித்திருப்பதை நீக்க வேண்டும் என்றுகூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மனுவுடன், ஜெயலலிதாவின் வக்கீல் வேணுகோபால் நாளை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவார் என்றும்தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications