3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு அழைப்பது சரியல்ல- வைகோ
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு அழைப்பதுஇதுவரை இல்லாத முன்மாதிரி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். எல்.கணேசன், மத்திய அமைச்சர்கள் செஞ்சிராமச்சந்திரன், கண்ணப்பன் மற்றும் முன்னணித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் நிலை என்ன என்பது குறித்து பேசப்பட்டது. கூட்டம் முடிந்ததும்வைகோ நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் நிலவும் குடிநீர்ப்பிரச்சனை மற்றும் பொதுப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு மெத்தனம்காட்டி வருகிறது.
இதை எதிர்த்து வரும் 18ம் தேதி சென்னை குடிநீர் வாரியம் எதிரில் எனது தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம்நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடன் எந்த அரசியல் கட்சியாவது இணைந்து பணியாற்ற விரும்பினால்வரவேற்போம். ஆனால் அதிமுக, திமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். மேலும்பா.ம.கவுடன் நாங்கள் கடைபிடித்துவரும் தோழமையைத் தொடர்வோம்.
அதிமுக ஆட்சி 100 நாட்களில் இதுவரை எந்த ஆட்சியும் பெறாத அளவுக்கு வெறுப்பையும், அதிருப்தியையும்பெற்றுள்ளது.
நாங்கள் எப்போதும் அரசியல் சட்டம் 356க்கு எதிரானவர்கள் தான். அந்தச் சட்டத்தையேநீக்க வேண்டும் என்பதில்உறுதியாக இருக்கிறோம்.
திமுக தலைவர் குருணாநிதியும், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று விரும்பவில்லை என்றுதான் சொல்கிறார்.ஆனால் திமுக எம்.பிக்கள் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்புகிறார்கள்.
இதைப்பற்றி கலைஞரிடம் கேட்டால் உணர்ச்சி வசப்பட்டு அப்படிக் கூறியிருப்பார்கள் என்கிறார்.
மேலும் இலங்கைக்கு ரசாயன ஆயுதங்களை ரஷ்யா வழங்கியதாகக் கூறப்படுகிறது. ரஷியா அப்படிச்செய்திருந்தால் அது ஈழத் தமிழர்களை அழிப்பதற்கான நடவடிக்கையாகும். இது குறித்து நான் பிரதமர்வாஜ்பாயிடம் பேசுவேன்.
மேலும் தமிழகத்தில் பணியாற்றும் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு அழைப்பது இதுவரை எந்த அரசும்கடைபிடிக்காத ஒரு முன் உதாரணம்.
மத்திய அரசின் இந்த முடிவு தவறானது.மேலும் மாநில அரசின் சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது. போலீஸ்அதிகாரிகள் தவறு செய்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
எனது இந்தக் கருத்தை பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவித்து இருக்கிறேன் என்று வைகோகூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications