கள்ளக்காதல்: மனைவி, 5 மகள்களைக் கொன்ற கணவன் கைது

Subscribe to Oneindia Tamil

சங்கராபுரம்:

தனது தம்பியுடன் கள்ளக்காதல் கொண்டிருந்த மனைவி மேல் கோபம் கொண்டு மனைவியையும், 5 மகள்களையும்கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதல் கொண்டிருந்த மனைவியை கணவன் கொல்வது, கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதல னின்துணையுடன் மனைவி கொல்வது போன்ற கொடூரமான சம்பங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்து வருகிறது.

பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும், பெண்களின் நன்னடத்தைக்கும் பெயர் பெற்ற தமிழகத்தில் இந்த சம்பவங்கள்நடப்பதுதான் வேதனைக்குரியது.

தற்போது தனது தம்பியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த மனைவி மேல் கோபம் கொண்டு மனைவியையும், 5மகள்களையும் கொன்ற கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, வட பொன்பரப்பி அருகில் உள்ளது பாக்கம் கிராமம். இந்தகிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கரீம் (40). இவர் துபாய், சவூதி அரேபியா போன்ற அயல்நாடுகளில் வேலைபார்த்து விட்டு சில வருடங்களுக்கு முன்புதான் பாக்கம் திரும்பினார்

அங்கு பெட்டிக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார் அப்துல் கரீமின் மனைவி பகருன்னிசா. இவர்களுக்கு நபீஷா(20), சாகீதா (15),நஸ்ரீன் (12), சகீரா பானு (10), யாஸ்மின் (4) ஆகிய 5 மகள்கள் உள்ளனர்.

கள்ளக் காதல்

அப்துல் கரீமின் மனைவி பகருன்னிசாவின் மனைவிக்கும்,கரீமின் தம்பி அப்துல் ரகீமுக்கும் கள்ளத் தொடர்புஇருந்து வந்தது. இதை அறிந்த கரீம் பல முறை மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் பகருன்னிசா இதைசட்டை செய்யவில்லை. அவரது கள்ளத் தொடர்பு தொடர்ந்து வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த கரீம் தன் மனைவியை கொன்று விடுவது என்று முடிவு செய்தார். தன் மனைவியுடன் 5மகள்களையும் சேர்த்து கொல்வது என்று முடிவு செய்தார்.

உயிருடன் புதைக்கப்பட்ட மகள்கள்

இதற்காக வீட்டிற்கு பின் புறம் பெரிய பள்ளம் தோண்டி மனைவியை கொன்று, மகள்களை உயிருடன் அதில்போட்டு மூடி விட்டார்.

அதன் பின் மன உளைச்சல் தாங்காமல் ஊர் ஊராக பல உறவினர் வீடுகளுக்கும் சென்றார். ஆனாலும் மனைவி,மகள்களை கொன்ற குற்ற உணர்வு அவர் மனதை விட்டு அகலவலில்லை.

குற்ற உணர்ச்சி - நம்பாத உறவினர்கள்

குற்ற உணர்வு தாங்காமல் உறவினர்களிடம் தான் தன் மனைவி, மகள்களை கொன்றதை கூறினார். ஆனால் அவர்கூறியதை யாரும் நம்பவில்லை,

இந்நிலையில் கரீம் திருவண்ணாமலையில் வசித்து வரும் தனது தம்பி ஆதம் அலியின் வீட்டிற்கு சென்றார்.அவரிடம் தான் பக்ருன்னிசாவையும், தனது மகள்களை கொன்று தனது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில்புதைத்த விவரத்தைக் கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ந்த ஆதம் அலி, உடனே திருவண்ணாமலை போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார்,ஆதம் அலி வீட்டிற்கு சென்று அங்கிருந்த அப்துல் விசாரணைக்காக கூட்டிச் சென்றனர்.

வாக்குமூலம்:

போலீஸ் ஸ்டேஷனில் அப்துல் கரீமை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது கரீம் கூறுகையில்,

என் மனைவி பகருன்னிசாவுக்கும் என் தம்பி அப்துல் ரகீமுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. நான் அவளைபல முறை கண்டித்தும் அவள் மாறவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை நடந்துவந்தது.

கோபம் கொண்ட நான் என் மனைவியையும், மகள்களையும் கொன்றுவிட முடிவு செய்தேன். இதையடுத்து, கடந்தஜுலை மாதம் 27ம் தேதி, வீட்டின் பின் புறம் உள்ள தோட்டத்தில் குழி தோண்டினேன்.

என் மனைவியை அங்கு அழைத்துச் சென்று அந்த குழியில் இறங்கச் சொன்னேன். அவள் மறுத்ததால் அவள்சேலையால் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று அவளை குழியில் தள்ளினேன்.

அதன் பின், "கழிப்பு கழிக்க வேண்டும்" என்று கூறி, மகள்களை ஒவ்வொருவராக தோட்டத்திற்கு அழைத்துச்சென்று அவர்கள் கைகளை கட்டி, வாயில் பிளாஸ்திரியை ஓட்டி அவர்களை குழிக்குள் தள்ளி குழியை மூடிவிட்டேன்.

அன்று இரவு வரை குழிக்கு அருகிலேயே இருந்தேன். போலீஸ் பிடித்துவிடுவார்கள் என்று பயந்து என் உறவினர்வீடுகளுக்குச் சென்றேன், குற்ற உணர்வு தாங்காமல் என் தம்பியிடம் நடந்த விவரங்களை கூறினேன் என்றார் கரீம்.

இன்று பிணங்கள் தோண்டி எடுப்பு

இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தந்தனர்.அவர்கள்திருவண்ணாமலை வந்து கரீமை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கரீமுக்கு சொந்தமாக 2 வீடு இருப்பதால் எந்த வீட்டில் அவர் தனது மனனவி, மகள்களை புதைத்தார் என்றுபோலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இன்று (திங்கள்கிழமை) போலீசார் பிணங்களை தோண்டி எடுக்கவிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+