அறங்காவலர்கள் நியமன விவகாரம்: தமாகா நிர்வாகிகள் கூட்டம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, புதிதாக 5 அறங்காவலர்களை காங்கிரஸ் கட்சி நியமித்தது தொடர்பாக, தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் திங்கள்கிழமை கூடி, விவாதித்தனர்.
மூப்பனாரின் மறைவிற்குப் பின்னர், இந்த அறக்கட்டளை என்னவாகும் என்ற கேள்வி அனைவருடையமனத்திலும் எழுந்தது.
இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, 5 புதிய அறங்காவலர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்தது.இவர்களில் 4 பேர் காங்கிரஸ்காரர்கள். 5வது நபர் தமாகாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜெயந்திநடராஜன்.
இந்நிலையில், இவ்விஷயம் தொடர்பாக, தமாகா நிர்வாகிகள் கூடி விவாதித்தனர். ஜெயந்தி நடராஜன், ராமசாமிஉடையார், எஸ். ஆர். பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், சோ. பாலகிருஷ்ணன் ஆகியோர்இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த இக்கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும்,காங்கிரஸ் கட்சியால் புதிய அறங்காவலராக ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டது குறித்து, அவரிடம் விளக்கம்கேட்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்தப் பிரச்சனையில், சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது விவரம் கூற மறுத்து விட்டனர்.
பீட்டர் அல்போன்ஸை முற்றுகையிட்ட சில நிருபர்கள், அவரிடம் கேட்டபோது, "பொறுத்திருந்து பாருங்கள்" என்றுமட்டும் கூறிவிட்டுப் போய்விட்டார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications