விபத்தில் ஊமையான மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு
சென்னை:
சாலை விபத்தில் சிக்கி ஊமையான மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ரூ.30.65 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்என்று இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தாம்பரம் அருகே ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது, எதிரில்வந்த லாரி, ஆட்டோவில் மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பாஸ்கர் பாபு, அழகப்பன், சுந்தர் ஆகியோர் இறந்துவிட்டனர். மேலும்பாலசுப்ரமணியம், ஆனந்தி மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் படுகாயமடைந்தனர்.
சிகிச்சைக்குப் பிறகு, மாணவி ஆனந்தி வாய் பேசும் திறனையும், காது கேட்கும் திறனையும் இழந்தார். மேலும்அவர் தானாக நடக்க முடியாத நிலையிலும் இருக்கிறார்.
இதையடுத்து ஆனந்தியின் தந்தை பாலசுப்ரமணியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்துகள்தீர்ப்பாயத்தில், விபத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு, வழக்குத்தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், தனதுதீர்ப்பில் கூறியிருப்பதாவது:
விபத்தில் பாதிக்கப்பட்ட ஆனந்திக்கு ரூ.30.65 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும்.
மேலும், விபத்தில் இறநந்த பாஸ்கர் பாபுவின் குடும்பத்துக்கு ரூ.2.40 லட்சமும், பாலசுப்ரமணியத்திற்கு ரூ.2.34லட்சமும், சுரேஷ் பாபுவுக்கு ரூ.60 லட்சமும், அழகப்பனுக்கு ரூ.5 லட்சமும், சுந்தருக்கு ரூ.3.12 லட்சமும் நஷ்ட ஈடாகவழங்க வேண்டும் என்று இன்சூரன்சு கம்பெனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications