6ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றம் வரும் 6ம் தேதி (வியாழக்கிழமை) கூடவிருக்கிறது. இந்த தகவலை இலங்கை வானொலிதெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன், சந்திரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ்விலக்கிக் கொண்டது. இதனால் சந்திரிகா அரசு பெரும்பான்மையை இழந்தது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் சந்திரிகா அரசின் மீது நம்பிகக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதனால்சந்திரிகா நாடாளுமன்றத்தை 2 மாத காலத்திற்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் சிங்கள அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (ஜே.வி.பி) ஆதரவை கோரியிருந்தார்சந்திரிகா. அவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சந்திரிகா பேச்சுவார்த்தை நடத்தினார். ஜே.வி.பி. விடுத்தமுக்கிய கோரிக்கைகளை ஏற்க சந்திரிகா சம்மதித்தார் இதையடுத்து ஜே.வி.பி, சந்திரிகா அரசுக்கு வெளியிலிருந்துஓராண்டுகாலம் ஆதரவு கொடுக்க சம்மதித்தது.
10 எம்.பிக்களை கொண்ட ஜே.வி.பியின் ஆதரவு கிடைத்திருப்பதன் மூலம் பெரும்பான்மையை இழந்திருந்தசந்திரிகா அரசுக்கு இருந்து வந்த ஆபத்து விலகியது.
ஜே.வி.பி. விடுத்த கோரிக்கைளில் ஒன்று, தற்போது 40 அமைச்சர்களைக் கொண்டுள்ள இலங்கைஅமைச்சரவையை 20 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையாக்க வேண்டும் என்பது. இதற்கு சந்திரிகா சம்மதம்தெரிவித்துள்ளார்.
மேலும் அக்டோபர் மாதம் 18 தேதி நடத்தவிருந்த பொதுவாக்கெடுப்பையும் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்சந்திரிகா.
இந்நிலையில் 2 மாத கால இடைவேளைக்கு பிறகு இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 6ம் தேதி சந்திரிகாகூட்டுகிறார். இந்த தகவலை இலங்கை வானொலி தெரிவித்துள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications