அரசு வழக்கறிஞரை "பொய்யர்" என்ற அதிமுக வழக்கறிஞர்கள்
டெல்லி:
டான்சி மற்றும் "பிளசன்ட் ஸ்டே" ஓட்டல் வழக்குகளில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் வழக்கறிஞர்வெங்கடபதியை "பொய்யர்" என்று விமர்சித்து, சென்னையிலிருந்து அதிமுக வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்நீதிபதிக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.
வழக்கறிஞர் வெங்கடபதி டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் அரசு சார்பில்ஆஜராகி வருகிறார்.
இவர், "இந்த 2 வழக்குகளிலும் தனக்கு போதுமான ஆவணங்கள் வழங்கப்பட வில்லை. மேலும் இந்த வழக்குகளில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே விசாரித்தால், நீதித்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருக்காது. எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்திற்குமாற்ற வேண்டும்" என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த 2 வழக்குகளின் அப்பீல் மனுக்களை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது.
மேலும் இந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரியும், அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையைதொடரவேண்டும் என்று கோரியும் ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு அப்பீல் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு வழக்கறிஞர் வெங்கடபதியை "பொய்யர்" என்று விமர்சித்து சென்னை பார் கவுன்சிலில் உள்ளஅதிமுக வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.
இதற்கு நீதிபதி பரூச்சா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சென்னை பார் கவுன்சில் இதுபோன்ற செயல்களைஉடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ஜெயலலிதாவின் வக்கீலான வேணுகோபாலும், "இது போன்ற தந்திகளை அனுப்பியது முட்டாள்தனமானது. விசாரணைகளின் வேகத்தை இது மேலும் பாதிக்கும்" என்று கூறி எரிச்சல் பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications