கள்ளக் காதலைத் தடுத்த தாயைக் கொன்ற மகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில், கள்ளக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தாயை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார் மகள்.

சென்னை வளசரவாக்கம் மீனாட்சி கோவில்தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது கணவர் பெயர் பலராமன்.சினிமா டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகனும், பாக்கியலட்சுமி (வயது 35) என்ற மகளும் உள்ளனர். கோகுலகிருஷ்ணன் வளைகுடாவில் வேலை பார்த்து வருகிறார்.

பாக்கியலட்சுமிக்கும் பாஸ்கரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் பாக்கியலட்சுமியின் நடத்தைசரியில்லாததால் பாஸ்கரன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இவர்களுக்கு ரேகா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமிக்கும், கேரளாவைச் சேர்ந்த நாதன் என்பவருக்கும் சரஸ்வதி திருமணம் முடித்துவைத்தார். பாக்கியலட்சுமியின் நடத்தை மீண்டும் சரிவர இல்லாததால், நாதனும் வீட்டை விட்டு வெளியேறினார்.தனக்குப் பிறந்த மகள் அட்சயாவுடன், நாதன் கேரளாவுக்கே சென்று விட்டார்.

இந்த நிலையில், பாக்கியலட்சுமிக்கும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சித்தநாதன் (24) என்ற அரிசிக் கடைவைத்துள்ள இளைஞருக்கும் காதல் ஏற்பட்டது. அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் பாக்கியலட்சுமி முடிவுசெய்தார்.

ஆனால் பாக்கியலட்சுமியை விட மிகவும் குறைந்த வயதான சித்தநாதனை திருமணம் செய்து கொள்ள சரஸ்வதிஎதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பாக்கியலட்சுமியோ விடாப்பிடியாக இருந்தார்.

அதே சமயம் சரஸ்வதி குடும்பத்தினருக்கு வேண்டியவரான பாஸ்கரன் என்பவருடனும் பாக்கியலட்சுமிக்குதொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராதலால் சித்தநாதனைவிட்டுவிட்டு பாஸ்கரனை திருமணம் செய்து கொள்ளுமாறு சரஸ்வதி கூறியுள்ளார். ஆனால் அதை பாக்கியலட்சுமிஏற்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க சரஸ்வதி வற்புறுத்துவதை அறிந்தசித்தநாதன் கோபத்துடன் சரஸ்வதி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கும், சரஸ்வதிக்கும் சண்டை மூண்டது.அப்போது கோபமடைந்த சித்தநாதன் சரஸ்வதியை தாக்கினார். அவருக்குப் பயந்து வீட்டுக்குள் சரஸ்வதி ஓடவேவீட்டிலிருந்த கேஸ் ரெகுலேட்டரை எடுத்து தாக்கியுள்ளார்.

பின்னர் பாக்கியலட்சுமி, தான் அணிந்திருந்த தொப்பையைக் குறைக்க பயன்படுத்தப்படும் பெல்ட்டைக் கழற்றிசரஸ்வதியின் கழுத்தில் வைத்து இறுக்கினார். அவரும், சித்தநாதனும் சேர்ந்து கழுத்தை இறுக்கி சரஸ்வதியைக்கொன்றதாகத் தெரிகிறது.

பின்னர் வீட்டில் கொள்ளையர்கள் வந்து சரஸ்வதியைத் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக தனது தந்தை பலராமனிடம் பாக்கியலட்சுமி கூறியுள்ளார். அதேபோல பலராமனும் போலீஸில் புகார்கொடுத்தார்.

போலீஸ் விசாரணையில் சரஸ்வதி கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டு பிடிபட்டது. அந்த கார்டுசித்தநாதனுக்குச் சொந்தமானது. இதையடுத்து சித்தநாதனைப் பிடித்த போலீஸார் விசாரித்தபோது நடந்தசம்பவம்தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, சித்தநாதனையும் பாக்கியலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+