தீவிர ஆலோசனையில் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுப்ரீம் கோர்ட்டில் தனக்கு எதிராக கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவது குறித்தும், முதல்வர்பதவியில் நீடிப்பது குறித்தும் முதல்வர் ஜெயலலிதா சட்ட நிபுணர்கள் மற்றும் தனது அரசியல் ஆலோசகர்களுடன்தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவியின் செயலைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பரூச்சா தலைமையிலான 5நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக நடந்து வரும் இந்த விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சில கடுமையானகருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சட்டத்தை மீறி முதல்வர் பதவியில்அமர்ந்தால் பிறகு சட்டம் எதற்கு என்றும் மக்கள் தீர்ப்பு இருந்தாலும்கூட சட்டத்தை மீறி செயல்பட முடியாதுஎன்றும் அவர்கள் ஜெயலலிதாவின் வக்கீலிடம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கின் போக்கு தனக்கு பாதகமாக அமையக் கூடும் என ஜெயலலிதா நினைப்பதாகத் தெரிகிறது.இதைத் தொடர்ந்து பல்வேறு சட்ட நிபுணர்களுடன் அவர் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத்தெரிகிறது. அவரது அரசியல் ஆலோசகர்களாகத் திகழும், சோ, வீரமணி உள்ளிட்டவர்களுடன் அவர் தீவிரஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதவிர, முன்னாள் ஆளுநர் ஒருவர் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோருடனும் ஜெயலலிதா தீவிரஆலோசனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனைகள் காரணமாக கடந்த சில நாட்களாக அவர்சட்டசபைக்கு வரவில்லை. அவருக்குப் பதில் அமைச்சர் பொன்னையன்தான் உறுப்பினர்களுக்குப் பதில் அளித்துவருகிறார்.

முதல்வர் ஜெயலலிதா தற்போது மிகவும் கவலையடைந்த நிலையில் இருப்பதாகவும், வழக்கிலிருந்து விடுபடுவதுதொடர்பாக அவர் தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, டான்சி வழக்கின் அப்பீல் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றதிதற்குமாற்ற வேண்டும் என்று கோரிய அரசு வக்கீல் வெங்கடபதி தாக்கல் செய்த மனு மற்றும் டான்சி அப்பீல் மனு மீதானஇடைக்காலத் தடையை நீக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு ஆகியவை வெள்ளிக்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+