கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் சச்சின், கும்ளே
மும்பை:
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரும், சுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ளேயும்மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
துவக்க ஆட்டக்காரர் சிவ சுந்தர் தாசும், விக்கெட் கீப்பர் தீப் தாஸ் குப்தாவும் இவ்வணியில் இடம் பெற்றுள்ளனர்
வலது கால் கட்டை விரல் எலும்பு முறிவு காரணமாக இலங்கை தொடரில் விளையாடாமல் இருந்த டெண்டுல்கர்,தோள்பட்டை அறுவை சிகிச்சை காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த கும்ப்ளே ஆகிய 2 பேரும்மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடிய அமய் குரேஷியா, விக்கெட் கீப்பர் சமீர் திகே,வேகப்பந்து வீச்சாளர் தேபாஷிஸ் மொகந்தி,அஜித் அகார்கர், சுழல் பந்து வீச்சாளர் ராகுல் சாங்வி, பேட்ஸ் மேன்ஹேமங் பதானி ஆகியோருக்குத் தற்போது இடம் இல்லை.
இந்திய கிரிக்கெட் டீமை வெளியிட்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெயவந்த் லேலேசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் முழு உடல் நலத்துடன் இருக்கிறார்களாஎன்பதற்கான ஃபிட்னெஸ் டெஸ்ட்டை, டாக்டர் ஆனந்த் ஜோஷி நடத்துவார்.
வரும் 22 அல்லது 23ம் தேதியன்று இந்தச் சோதனை நடைபெறும். பின்னர் இந்திய அணி வரும் 24ம் தேதிஜொகானஸ்பர்க் புறப்பட்டுச் செல்லும் என்று கூறினார் லேலே.
இந்திய அணி விவரம்
சவுரவ் கங்குலி (கேப்டன்), ராகுல் டிராவிட் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லக்ஷ்மண், அனில்கும்ப்ளே, யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ஜவஹல் ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.எஸ். சோதி,சிவ சுந்தர் தாஸ், ஜாகீர் கான், வெங்கடேஷ் பிரசாத், தீப் தாஸ் குப்தா (விக்கெட் கீப்பர்).
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications