அர்ஜுனுக்குப் பதிலாக வருகிறது புதிய டாங்க்
வாஷிங்டன்:
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "அர்ஜுன்" ரக பீரங்கி டாங்கிகள் தோல்வி அடைந்துவிட்டதைத் தொடர்ந்து "கரண்"என்ற புதிய அதிநவீன டாங்கிகளைத் தயாரிக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
"அர்ஜுன்" டாங்க்குகள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. இதையடுத்து இந்தப் புது முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய டாங்க்கின் அடிப்பாகம் மட்டும் ரஷ்யாவின் டி-72 டாங்க்குகளைப் போலவே வடிவமைக்கப்படஉள்ளது. இதைத்தவிர மற்ற பாகங்கள் எல்லாம் "அர்ஜுன்" டாங்க் போலத்தான் இருக்கும்.
இப்போது ராணுவத்தில் உபயோகத்தில் இருக்கும் பழைய டி-72 ரகத்தைச் சேர்ந்த 1,200 டாங்கிகளையும் கரண் ரகடாங்கிகளைக் கொண்டு மாற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது.
பூமர் லேப்டி என்ற போலந்து நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில், தற்போது பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் இந்தகரண் டாங்கிகளை வடிவமைத்து வருகிறது.
ஆனால், இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய ராணுவத்தின் தேவைகளை இவைபூர்த்தி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications