தீவிரவாதிகளை ஒழிக்க சர்வதேச படை: இந்தியா யோசனை
டெல்லி:
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரவாதத்தை ஒழிக்க உலக அளவில் ஒரு படைஅமைக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அத்வானி கூறியுள்ளார்.
தீவிரவாதிகள் சில அரசியல் நோக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டுவருகிறார்கள்.
அவர்கள் ஒன்றுமறியாத அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதன் மூலம், தங்கள் நோக்கங்கள்வெற்றிபெற்றுவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள்.
இந்தியாவைப் பொருத்தவரை எல்லைதாண்டிய பயங்கரவாதம் பெரிய பிரச்சனையாக இருந்துவருகிறது.
இவ்வாறு அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஜனநாயகத்திற்கு தீவிரவாதிகள் விடும் சவாலைச் சமாளிக்க உலகநாடுகள் அனைத்தும் பங்குபெறும் தனிப்படை அமைக்க வேண்டும்.
இந்த முயற்சியை இந்தியா கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது.
இந்த முயற்சிக்கு தற்போது அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளின் ஆதரவுகிடைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களின் மீது தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான அனைத்து நாடுகளின் ஒற்றுமை பலப்படும் என்று நம்பலாம்.
தீவிரவாதிகளின் இதுபோன்ற வன்முறைச் செயல்களைத் தடுத்து அவர்களை முற்றிலும் ஒழிக்க உலகம் தழுவியதனிப்படை அமைப்பது அவசியம் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். இவ்வாறு அத்வானி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications