ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கக் கூடும் என்று கருதும் பாகிஸ்தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் தன்னுடைய படைகளைக் குவித்து வருகிறது.

அமெரிக்காவில் நடந்த தற்கொலைப் படையினரின் விமானத் தாக்குதல்களுக்கு, ஒசாமா பின் லேடன்தான்காரணம் என்று அமெரிக்கா முழுமையாக நம்புகிறது. இதை பின் லேடனும், ஆப்கனில் அரசு நடத்தி வரும்தலிபானும் மறுத்துள்ளனர்.

இருந்தாலும், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா விரைவில் தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி நகரான பலுசிஸ்தானிலும் வடமேற்கு எல்லைப் பகுதிகளிலும்,பாகிஸ்தான் படைகள் குவிய ஆரம்பித்துள்ளன.

பெஷாவர் மற்றும் குவெட்டா போன்ற பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் ராணுவத்தினரும் முழு கவனத்துடன்இருக்குமாறு உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தலிபான் அரசின் தலைவரான "சுப்ரீம் கமாண்டர்" முல்லா ஒமர், யாரும் தெரியாத இடத்திற்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தானிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+