டெல்லியில் குண்டு வைக்க திட்டம்... 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது
டெல்லி:
டெல்லியில் வெடிகுண்டு வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த இரண்டு பாகிஸ்தான்தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மேல் சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் பெயர் மக்சூத்மற்றும் செய்யது என்பதும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களைச் சோதனையிட்டதில், 2 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருத்து, 1 கையெறிகுண்டு, 2டெட்டனேட்டர்கள் மற்றும் 1 செல் போன் ஆகியவற்றை வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்த போது தெரிய வந்ததாவது:
மக்சூத் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் காஷ்மீர் குப்வாராமாவட்டத்தில் பல வன்முறைச் சம்பவங்ளில் ஈடுபட்டுள்ளார்.
அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து பெரும்சேதத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதற்காகத்தான் பாகிஸ்தான் கூலிப்படையினரால் டெல்லிக்கு தான் அனுப்பப்பட்டிருந்ததையும் போலீசாரிடம்மக்சூத் தெரிவித்தார். மேலும், இதற்காக 2 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கொண்டு வந்தது தான்தான் என்றுசெய்யது கூறினார்.
மகசூத் தங்கியிருந்த தாய்மூர் நகர் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்து, மேலும் 6 கிலோஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.
மக்சூத்துக்கும், செய்யதுக்கும் உதவி செய்த ஆசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications