எங்களை மிக பயங்கரமாக தாக்கப் போகிறார்கள்: ஆப்கானிஸ்தான் பீதி
காபூல்:
அமெரிக்கா எங்களை மிக பயங்கரமாக தாக்கப் போகிறது. அவர்களின் கடும் தாக்குதலை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம். தாக்குதல் நடந்தால் அமெரிக்காவை நிச்சயம் பழிவாங்குவோம் என ஆப்கானிஸ்தான்கூறியுள்ளது.
அப்துல் கூறியதாவது:
எங்களைப் பாதுகாத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும். என்ன விலை கொடுத்தாவது நாட்டைக் காப்போம்.அதே போல நிச்சயம் இந்தத் தாக்குதல்களுக்கு பழி தீர்ப்போம்.
எங்களைத் தாக்கப் போவதாக அமெரிக்கா வெளிப்படையாகவே கூறிவிட்டது. இந்தத் தாக்குதல் மிகப் பெரியஅளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 1998ம் ஆண்டு பின் லேடனின் பயிற்சி முகாம்களை மட்டும் தான்அமெரிக்கா குறி வைத்தது.
இப்போது எங்கள் அரசையும் ஆட்சியாளர்களையும் ஒழித்துக் கட்டும் திட்டத்துடன் அமெரிக்கா தாக்கும்.
பின் லேடனை நாங்கள் அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம். அவர் இத் தாக்குதலை நடத்தவேயில்லைஎன்றார்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் ஆட்சியாளரான ஒமரின் ஆங்கில அறிக்கை இன்று பாகிஸ்தான் தலைநகர்இஸ்லாமாபாத்தில் வெளியிடப்பட்டது. அதிலும் பின் லேடன் அமெரிக்காவைத் தாக்கவில்லை. இதனால் அவரைஅமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications