குருவாயூர் போகும் ஜெ. டெல்லி போகக் கூடாதா? கருணாநிதி பதில் கேள்வி
சென்னை:
நான் முதல்வராக இருந்த போது, நான் காவிரி பிரச்சனை தொடர்பாக கூட்டியஅனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஜெயலலிதா எத்தனை முறை வந்துள்ளார் என்றுதி.மு.க.தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கருணாநிதி வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றைவெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் முதல்வராக இருந்த போது காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சிகூட்டங்கள் கூட்டினேன். அவற்றில் எத்தனை கூட்டங்களில் ஜெயலலிதா கலந்துகொண்டார். நான் அவர் ஏன் வரவில்லை என்று கேட்கவில்லை. இதைவிடஎன்னவேலை என்று ஜெயலலிதாபோல் குழாயடிச் சண்டை பாணியில் கேள்விகேடக்வில்லை.
நான் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒரு முறை எதிர்கட்சி தலைவர்ராதாவையும் மற்றொரு கூட்டத்திற்கு .துணைர் பொதுச் செயலாளர் சின்னசாமியையும்.மணியையும்தான் அனுப்பி வைத்தார்.
தமிழகத்திற்கு தண்ணீர் பெறுவதற்கு தீவிர முயற்சி வேண்டும். அதற்காக அ.தி.மு.க.எடுக்கும் முயற்சிகளுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று கூறியிருந்தேன்.
அதே போல் முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்அன்பழகனும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொண்டனர்.
காவிரி பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்வர் என்னை தாக்கிபேசியுள்ளார். என்னைத் தாக்கி பேசுவதுதான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு என்றுநினைத்து என்னை தாக்கி பேசியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா கூட்டிய அனைத்து கட்சி கூட்த்திற்கு தலைமைச் செயலாளர்தான்கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தார். நான் ஆட்சியில் இருந்த போது அனைத்துகட்சி கூட்டத்திற்கு நானே கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தேன்.
நடுவர் மன்ற தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றுகூறியவர் ஜெயலலிதா. இதை விட வேறு என்ன பாதகச் செயலை விவாசயிகளுக்குசெய்ய முடியும்.
காவிரி பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி சார்பாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போது அ.தி.மு.க. நாங்கள் தனியாகமனு கொடுப்போம் என்று கூறி தனியாக சென்று மனு கொடுத்தனர்.
காவிரி பிரச்சனையில் கட்சி பாகுபாடு கூடாது என்று தி.மு.க.ஒத்துழைப்பு வழங்கிவருகிறது.
காவிரி பிரச்சனையில் ஜெயலலிதாவுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால்அவரே அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தலைமை ஏற்று டெல்லி சென்றிருக்கவேண்டும். குருவாயூருக்கு போக முடிகிறது. டெல்லிக்கு போக முடியவில்லையா?
காவிரி பிரச்சனை போன்ற முக்கிய பிரச்சனைகளில் மற்றவர்கள் மேல் குற்றம்சுமத்திவிட்டு தப்பிக்க முயலாமல், அனைத்துக் கட்சியினருடன் ஒத்துழைத்துபிரச்சனைக்கு தீர்வு காண ஆட்சியாளர்கள் முன்வருவார்களா? என்று கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications