ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்... தமிழக அரசு மீது நடவடிக்கை இல்லை
சென்னை:
ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பும் விஷயத்தில் தமிழக அரசின் மீது நடவடிக்கை எதுவும்எடுக்கப்படாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யா சாகர் ராவ் கூறியுள்ளார்.
சென்னை நகர கமிஷனர் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டும் என்றுதமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி மாற்றம் செய்யும் விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்த விதமான அதிகாரமும்கிடையாது என்று கூறி ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதாமறுத்துவிட்டார்.
ஆனாலும் தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி ராஜகோபாலனை மட்டும்மத்திய சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்.பி.ஜி) தலைவர் பதவிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டு அவரை டெல்லிக்குஅனுப்பி வைத்தார் ஜெயலலிதா.
இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்பும் விஷயத்தில் தமிழக அரசு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ்கூறியுள்ளார்.
இன்று (திங்கள்கிழமை) சென்னை வந்த அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியின் போது கூறுகையில்,
ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்பும் விஷயத்தில் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கும்எண்ணம் எதுவும் இல்லை. ஐ.பி.எஸ். அதிகாரிகளை விரைவில் மத்திய அரசு பணிக்கு அது அனுப்பி வைக்கும்என்று நம்புகிறேன்.
அமெரிக்காவின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் போல் இந்தியாவின் மீது எந்த விதமான தாக்குதலும்நடத்தப்படக்கூடாது என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன என்றார் வித்யாசாகர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications