உஷார் நிலையில் பாகிஸ்தான் ராணுவம்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானை இன்னும் ஓரிரு நாளில் அமெரிக்கா தாக்கவிருப்பதையொட்டி, பாகிஸ்தான் முழுவதும்ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கோரி, கடைசி முயற்சியாக ஆப்கனுக்கு விரைந்துள்ளனர்பாகிஸ்தான் அதிகாரிகள். அங்கு தலிபான் அரசுக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையே தற்போதுபேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை முழு உஷார் நிலையில் வைத்துள்ளது. எல்லைப் பகுதியைநோக்கி எந்த ராணுவத் துருப்பும் செல்லாவிட்டாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று கருதும்பாகிஸ்தான் அரசு, நாட்டிலுள்ள அனைத்து ராணுவ நிலைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
ஆப்கன் எல்லையிலுள்ள தோர்காம் பகுதியில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-ஆப்கன்எல்லைப் பகுதிகள் இன்னும் மூடப்படவில்லை. இதனால், ஏராளமான ஆப்கன் அகதிகள் இப்பகுதிகள் மூலமாகப்பாகிஸ்தானுக்கு வந்தவண்ணம் உள்ளனர். பல அகதிகளை தலிபான்கள் திருப்பி நாட்டுக்குள் அடித்து விரட்டிவருகின்றனர்.
அமெரிக்காவின் தாக்குதலை ஆப்கனும் முழு அளவில் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான்எல்லைப் பகுதியில் மெஷின் கன்னுடன் தலிபான் வீரர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் எந்த நாட்டையும் தாக்குவதற்குத் தயங்க மாட்டோம் என்று தலிபான் அரசுஎச்சரித்துள்ளது.
தற்போது அமெரிக்காவிற்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான், இந்த எச்சரிக்கை காரணமாக ஆப்கனின்கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications