அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறது
Subscribe to Oneindia Tamil
மும்பை
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
வங்கிகள், இறக்குமதியாளர்கள் என்று அனைவரும் அமெரிக்க டாலர்களாக வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது.
ஏற்கனவே படிப்படியாகச் சரிந்து கொண்டிருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஒரு வாரத்தில் வெகு வேகமாகச்சரிந்து விட்டது.
வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ரூ.47.85 முதல் ரூ.47.87 என்றிருந்த ஒரு டாலரின் மதிப்பு, இன்று(திங்கள்கிழமை) காலை ரூ.47.95 முதல் ரூ.47.98 என்று ஆகிவிட்டது.












Click it and Unblock the Notifications