அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தலிபான் எதிர்ப்புப் படை தயார்
மலாஸ்பா (ஆப்கானிஸ்தான்):
தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் ஆப்கானிஸ்தான் எதிர்ப்புப் படையினர் தங்களை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பரப்பளவில் சுமார் 7 சதவீதம் இவர்களின் கையில் தான் உள்ளது. இவர்களை ஒடுக்க தலிபான் ஆட்சியாளர்கள் எடுத்தமுயற்சிகள் பலனளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அரசும் இந்த எதிர்ப்புப் படையினரைத்தான் ஆதரித்து வருகிறது. இந்த அரசைத் தான் இந்தியாவும் அங்கீகரித்துள்ளது. இந்த அரசின் ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானி பலஆண்டுகள் இந்தியாவில் தான் தங்கியிருந்தார்.
இந் நிலையில் தலிபான்களின் முக்கிய கூட்டாளிகளான ஒசாமா பின் லேடனின் ஆட்கள் டி.வி நிருபர்கள போல நடித்து குண்டு வீசி அகமத்ஷா மசூதைக் கொன்றுவிட்டனர். இப்போது அவரது படையில் நம்பர் டூவாக இருந்த பகீம் தான் இந்த எதிர்ப்புப் படைக்குதலைமையேற்றுள்ளார்.
இப்போது தலிபான்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவுள்ள நிலையில் ரப்பானி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரான அப்துல்லாஅப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
தனது போர் விமானங்களைக் கொண்டு தாக்குவதால் தலிபான்களை அமெரிக்கா வென்றுவிட முடியாது. தலிபான்கள் பதுங்கித் தாக்குதல்நடத்துபவர்கள். அவர்களை எதிர்க்க நார்த்தர்ன் அலையன்ஸ் படையால் தான் முடியும். இந்தப் படையினருக்கு அமெரிக்கா உதவினாலேபோதும். தலிபான்களை ஒழித்துவிடலாம்.
மலைகளிலும் குகைகளிலும் மறைந்துள்ள பின் லேடனின் கூட்டாளிகள், தலிபான்களை நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக தாக்கிவருகிறோம். எங்களின் தாக்குதல்களுக்கு அமெரிக்கா உதவ வேண்டும்.
அமெரிக்காவில் தாக்குதல் நடந்த சில தினங்களுக்கு முன் தான் அகமத் ஷா மசூத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை இரண்டுமே பின்லேடனின் செயல்கள் தான். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள் தான் என்றார் அப்துல்லா அப்துல்லா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications