வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்
சென்னை:
ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்ததற்கு வாஜ்பாயும், கருணாநிதியும்தான் காரணம் என்று கூறி அவர்களதுகொடும்பாவியை அமைச்சர்கள் தலைமையில் அதிமுகவினர் எரித்து வருவதைக் கண்டித்துதமிழக பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டதுசெல்லாது என்று கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்துஜெயலலிதாவின் முதல்வர் பதவி ரத்தானது
இதற்கு பிரதமர் வாஜ்பாயும், மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் திமுகதலைவர் கருணாநிதி ஆகியோர் தான் காரணம் என்று கூறி மாநில முழுவதும் இந்தத்தலைவர்களின் கொடும்பாவிகளை அதிமுகவினர் எரித்து வருகின்றனர்.
இதற்கு தமிழக பாஜகவினர் கடும் எதிர்பு தெரிவித்துள்ளனர். அதிமுவினரின் நடந்துகொள்ளும் விதத்தை கண்டித்து இன்று (புதன்கிழமை) மயிலாப்பூர், லஸ் கார்னரில் தமிழகபாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமானப்படுத்தும் அதிமுகவினரைக் கண்டித்து அவர்கள்கோஷங்கள் எழுப்பினர். வாஜ்பாய், அருண்ஜெட்லி, கருணாநிதி ஆகியோர்கொடும்பாவியை எரித்தவர்கள் மீதும், அதிமுக நடத்தும் கண்டன பேரணிக்களுக்குதலைமை வகித்து வரும் மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்அவர்கள் கோஷமிட்டனர்.
அப்போது தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல, கணேசன் பேசுகையில், ஜெயலலிதாமுதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த விஷயத்தில்பிரதமர் வாஜ்பாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ஜேட்லி, திமுக தலைவர் கருணாநிதிஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிமுகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்கள் பிரதமர் கொடும்பாவியை எரித்துள்ளனர். இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக ஆளுனரிடமும், உள்துறைசெயலாளரிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்றார்.
நேற்று திருச்சியில் பா.ஜ.க. இளைஞர் அணியினர் போட்டிக்கு ஜெயலலிதாவின்கொடும்பாவியை எரித்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications