என்னை குற்றம் சொல்வதே ஜெ.யின் வழக்கம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை எல்லாவற்றிற்கும் என்னை குற்றம் சொல்வதையே ஜெயலலிதா வழக்கமாககொண்டுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதால் ஜெயலலிதா கடந்த தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.ஆனால் நான்தான் சதித்திட்டம் தீட்டி, அவரை தேர்தலில் நிற்க விடமால் செய்துவிட்டதாக என் மீது குற்றம்சுமத்தினார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்புவழங்கியது. சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்பு அது. ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் நான்தான்காரணம் என்று இப்போது குற்றம் கூறி வருகிறார்.

நான் என்றுமே ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று கூறியதில்லை. அவர் அரசை கலைக்க வேண்டும்என்றும் கூறியது கிடையாது.

உண்மை இவ்வாறு இருக்க தன் மீது எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைக்கும் கருணாநிதிதான் என்று என் மீதுஜெயலலிதா குறை கூறி வருகிறார். அதுதான் அவரது வழக்கம் போலும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+