உள்ளாட்சித் தேர்தல்
இன்னொரு தேர்தலுக்கு தயாராகி வருகிறது தமிழகம். சட்டசபைத் தேர்தல் முடிந்து 5 மாதம் கூட முடியாத நிலையில் வந்துவிட்டது உள்ளாட்சித் தேர்தல்.கடந்த 4 மாதங்களில் அதிமுக ஆட்சியின் மீதான ஒரு கருத்துக் கணிப்பாக இந்தத் தேர்தல் இருக்கப் போகிறது.
கருணாநிதியை ராத்திரியில் போலீஸை விட்டு அடித்து இழுத்துச் சென்றது, ஜெயலலிதா பதவி இழந்தது. இவை இரண்டும் தான் முக்கிய விவாதப்பொருள்களாக இருக்கப் போகின்றன.
திமுக, அதிமுக தவிர எல்லா கட்சிகளுமே தங்கள் நாடியைப் பிடித்துப் பார்க்க இந்தத் தேர்தல் உதவும். ஸ்டாலினை மீண்டும் மேயர் பதவிக்கு நிறுத்திவிட்டதுதிமுக.
சென்னை தவிர வேறு மாநகராட்சிகளில் நம்பிக்கையோடு களம் இறங்கியுள்ளது அதிமுக.
வழக்கம்போல் தேர்தலுக்கு முன் அணி மாறி தனது தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார் ராமதாஸ்.
மூப்பனார் இல்லாத த.மா.கா. ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
காங்கிரசுக்கு திடீர் வீரம் வந்துவிட்டது. குட்டி குட்டி கட்சிகளைத் திரட்டி தனி அணி அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் ஜாதிக் கட்சிகளும் அங்காங்கே போட்டியிடுகின்றன.
வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் அரசியலைவிட அடிப்படைப் பிரச்சனைகள் தான் முக்கியத்துவம் பெறும்.
கடந்த தேர்தலில் கவுன்சிலர் ஆனதில் சம்பாதித்து வீடு கட்டி செட்டில் ஆகிவிட்ட பலர் மீண்டும் உங்கள் வீட்டிக்கு வந்து பல் இளிப்பார்கள். நாங்கள்உங்கள் ஜாதி தான். ஓட்டுபோடுங்கள் என்பார்கள்.
இவர்களைப் புறக்கணித்துவிட்டு நீங்கள் சந்தித்து வரும் மழையில் கரைந்த ரோடுகள், வெயிலில் வெடித்த ரோடுகள், நிரம்பி வழியும் சாக்கடைகள்,தண்ணீரே பார்த்திராத குழாய்கள், குப்பை மேடுகள், தெருவில் திரியும் பன்றிகளை மனதில் நிறுத்திக் கொண்டு யோசித்து ஓட்டுபோட்டால் விடிவு வரவாய்ப்புண்டு.
இப்போது தமிழகத்தின் 5 மாநகராட்சிகளில் ஒரு ரவுண்ட் போகலாமா?
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications