பிரிந்த சகோதரர்களை சேர்த்த நல அதிர்ச்சி
மாநகராட்சியின் தற்போதைய உறுப்பினர்கள் பட்டியல்:
மேயர்: ப.குழந்தைவேலு (திமுக).
துணை மேயர்: மிசா. பாண்டியன் (திமுக).
சக்தி பெருமாள் (திமுக), ராமலட்சுமி (திமுக), எம்.ராதா (திமுக), ரெங்கம்மாள் (தமாகா), அன்னபூரணி (திமுக), ஆரோக்கிய மேரி (தமாகா),பாக்கியம் (திமுக), ஜெகந்நாதன் (திமுக), சுப்புலட்சுமி (திமுக), சரவணன் (தமாகா), மலைச்சாமி (தமாகா), ஜெயராஜ் (திமுக), திலகம் (சுயேச்சை),எம்.சரவணன் (சிபிஐ), எம்.எஸ்.பாண்டியன் (அதிமுக), கே.ராஜு (அதிமுக), விஸ்வநாதன் (தமாகா), மணிமேகலை (சி.பி.ஐ.எம்), அய்யாவு (சி.பி.ஐ. எம்),ராமன் (திமுக), ராமய்யா (திமுக), மகாலட்சுமி (தமாகா), தமிழரசி (திமுக), பொன்னுத்தாய் (சிபிஐ எம்), சின்னம்மாள் (சுயேச்சை), பார்வதிஅண்ணாமலை (திமுக), சிங்கத்தேவன் (தமாகா), ராணி (திமுக), சுலைஹா பீவி (தமாகா), சண்முகம் (திமுக), துரைராஜ் (அதிமுக), தர்மலிங்கம் (திமுக), மீனாசெல்வராஜ் (தமாகா), மகாலிங்கம் (சிபிஐஎம்), எஸ்.போஸ் (சுயேச்சை), மாணிக்கம் (திமுக), ராஜாமணி (தமாகா), மகாமணி (தமாகா), ஜம்பு(தமாகா), வாவா புஹாருதீன் (திமுக), பாண்டியன் (திமுக), ஈ.ராஜு (சுயேச்சை), அழகர்சாமி (திமுக), மாணிக்கம் (சுயேச்சை), ஓ.வி.ஆர்.மோகன்(தமாகா), ஜெகந்நாதன் (தமாகா), ராமமூர்த்தி (தமாகா), அப்துல் காதர் (சுயேச்சை), எஸ்.ராஜு (தமாகா), எஸ்.கிருஷ்ணன் (தமாகா), முருகேஸ்வரி(திமுக), கருப்பாயி (அதிமுக), யோகராஜன் (திமுக), குமரேசன் (தமாகா), ஜோதிலால் (தமாகா), சண்முகவள்ளி (அதிமுக), வி.கே.குருசாமி (திமுக),ஜெயபாலன் (அதிமுக), செல்லம் (சிபிஐ எம்), எஸ்.முருகன் (சிபிஐ எம்), செல்வராஜ் (திமுக), கே.போஸ் (அதிமுக), மணிவண்ணன் (திமுக), ராமலிங்கம்(மதிமுக), எஸ்.எஸ்.போஸ் (தமாகா), எம்.கணேசன் (சிபிஐ எம்), தமிழரசி (திமுக), இந்திரா (திமுக), முனியாண்டி (திமுக), எம்.சந்திரன் (திமுக), சிலுவைஞானபிரகாஷ் (தமாகா), முத்துராமலிங்கம் (அதிமுக)
தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள்:
அதிமுக
திமுக
அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
தமிழக ஜனதாக் கட்சி (சுப்பிரமணிய சுவாமியின் கட்சி)
வெற்றி வாய்ப்பு யாருக்கு?:
மதுரையைப் பொறுத்தவரை திமுகவுக்கு கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் பெயர் கெட்டுப் போயுள்ளது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியகாரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியும் ஒரு காரணமாக இருக்கிறார்.
கடந்த காலங்களில் அழகிரியின் தாக்கம் மாநகராட்சியின் நிர்வாகம் முதல் சாதாராண பிரச்சினை வரையிலும் இருந்ததை மதுரை மக்கள் இன்னும்மறக்கவில்லை. குறிப்பாக அழகிரி மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தபோது அதை எதிர்த்து மதுரை நகரில் நடந்த பல வன்முறைச் சம்பவங்களைமக்கள் மறக்கவில்லை.
அதைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் மேயர் குழந்தைவேலு குறித்து மதுரை மக்களிடையே நல்ல பெயர் உள்ளது. ஒரு கட்சிக்காரராக மட்டும்செயல்படாமல் நகர நலனுக்காக பல திட்டங்களை அவர் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது மக்கள் மனதைக் கவர்ந்துள்ளது.
குண்டும் குழியுமாக இருந்த நகர சாலைகளை புதுப்பித்தது, மதுரை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ரிங் ரோட்டை திறந்து அதை வெற்றிகரமாகஇயக்க உதவியது, வெளியூர் பேருந்து நிலையங்களை ஒட்டுமொத்தமாக புறநகர்ப் பகுதியான மாட்டுத் தாவணிப் பகுதிக்கு மாற்றியது, அந்த பேருந்துநிலையத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது, குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ராஜாஜி சிறுவர் பூங்காவை சிறப்புற உருவாக்கியது என பல நல்லவிஷயங்களை மக்களே பட்டியலிட்டுக் காட்டுகிறார்கள்.
ஆனால் எத்தனை திட்டங்களை நிறைவேற்றியிருந்தாலும் கூட ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தது, திமுகவின் திட்டமிட்ட வேலைதான் என்ற எண்ணம்மக்கள் மனதில் எழுந்துள்ளதால் அது திமுகவினரின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.
மதுரையைப் பொறுத்தவரை திமுகவுக்கு பாதகமான அம்சங்கள் பெரிய அளவில் இல்லை. ஆனால் மிகப் பெரிய பின்னடைவு என்ன என்று கேட்டால் மிசா.பாண்டியனை மட்டும் கூறலாம்.
கொலை வழக்கில் அவர் குற்றம் சுமத்தப்பட்டது, மாநகராட்சிக் கூட்டத்திற்கு வராமல் தப்பி ஓடியது, தலைமறைவாக இருந்து கோர்ட்டில் சரண்அடைந்தது, மேயர் குழந்தைவேலுவுடன் அடாவடியாக நடந்து கொண்டது, அவரை அடித்து உருட்டியது என கட்சிக்கு மிகப் பெரிய அளவில் கெட்ட பெயரைஏற்படுத்தியுள்ளார்.
எனவே, இவையெல்லாம் அதிமுகவுக்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதைமறுப்பதற்கில்லை.
அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜு, அதிமுக மாநகராட்சி தலைவராக இருந்து செயல்பட்டவர். துணை மேயர் மிசா.பாண்டியன் கொலை வழக்கில் சிக்கியதையடுத்து மாநகராட்சிக் கூட்டங்களில் மிகக் கடுமையாக வாதிட்டவர்.
அதிமுக குழுவை சிறப்பாக வழி நடத்திச் சென்றார் என்ற பெயரும் அவருக்கு உள்ளது. இதன் காரணமாக மேயர் தேர்தலில் திமுக சார்பில் யார்போட்டியிட்டாலும் ராஜு அவருக்குக் கடுமையான போட்டியாக இருப்பார் என்பது மட்டும் உண்மை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications