மின் ரயிலில் பிறந்த பெண் குழந்தை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரயிலிலேயே பிரசவம்-நடந்தது. அவர் பெண் குழந்தையை பிரசவித்தார்.

சென்னையின் புற-நகர் பகுதியான பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கஸ்தூ-ரி. இவர் -நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த -நிலையில் ஞாயிற்றுக்கிழமை கஸ்தூ-ரி, பல்லாவரத்தில் இருந்து மின்சார ரயிலில் பயணம் செய்தார். கடற்கரைரயில் -நிலையம் வரை அவர் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால் கோடம்பாக்கம் ரயில் -நிலையம் அருகே வந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ரயில்கோடம்பாக்கம் -நிலையத்தில் -நிறுத்தப்பட்டது.

ரயிலில் இருந்த பிற பெண் பயணிகள் சேர்ந்து கஸ்தூ-ரி குழந்தையை பெற உதவி செய்தனர். கஸ்தூ-ரிக்கு அழகானபெண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தை பத்திரமாக பிறந்த சந்தோஷத்தில்பயணிகள் -நிம்மதிப் பெரு-மூச்சு விட்டனர். பின்னர் ரயிலும் உற்சாகமாக கிளம்பிச் சென்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற