லண்டன் ஓட்டல் வழக்கு: இன்றும் ஜெ. ஆஜராகவில்லை
சென்னை:
லண்டன் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக இன்றும் கோர்ட்டில்ஆஜராகவில்லை.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகளுக்கு நீதிபதி அசோக்குமார் கடும்கண்டனம் தெரிவித்தார்.
லண்டனில் 2 ஓட்டல்கள் வாங்கி ரூ. 45 கோடி வரை சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமற்றும சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் எம்.பி. ஆகியோர் மீது திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை கடந்த மார்ச் மாதம் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதிஅசோக்குமார் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ஜூன் 12ம் தேதி ஜெயலலிதாவும், தினகரனும் கோர்ட்டில் ஆஜக வேண்டும் என்று நீதிபதிஉத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அரசு தரப்பில் இதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. எனவே இந்த வழக்கைசெப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் சம்மன் அனுப்பவில்லை.இதனால் ஜெயலலிதா இன்றும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. ஏற்கனவே இருமுறை அவர் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை.
இன்றும் அவரும் தினகரனும் கோர்ட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து, நீதிபதி அசோக்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரியான சுப்பாராவ்உள்ளிட்ட அதிகாரிகளிடம் சராமாரியாக கேள்வி எழுப்பினார்.
நீதிபதி கேட்ட கேள்விகள் விவரம்:
லண்டனில் ஓட்டல் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க நீங்கள் லண்டன்சென்றீர்கா?. லணட்ன் செல்ல பாஸ்போர்ட்டாவது வைத்துள்ளீர்களா?. அல்லது மெரினா பீச்சையாவதுதாண்டியிருக்கீர்களா?. சென்னையில் இருக்கும் ஒருவருக்கு சம்மன் அனுப்பமுடியவில்லை என்றால் அதற்கானகாரணம் என்ன? என்று கேட்டார்.
இதற்கு விசாரணை அதிகாரிகள் தரப்பில் பதில் எதுவும் கூறப்படவில்லை.
இதையடுத்து இன்று பிற்பகலில் இந்த வழக்கு விசாரணை குறித்தும் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதுகுறித்தும் உத்தரவிடுவதாக நீதிபதி அசோக் குமார் அறிவித்தார்.
தற்போது அதிமுக ஆட்சியில் உள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பவில்லைஎன்று கூறப்படுகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications