காஷ்மீர் தாக்குதல் - ஜெர்மனி கடும் கண்டனம்
பெர்லின்:
காஷ்மீர் சட்டசபை வளாகத்தின் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படையினர் நடத்தியதாக்குதலை ஜெர்மனி வன்மையாக கண்டித்துள்ளது.
இந்த தாக்குதலை ஜெர்மனி வன்மையாக கண்டித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் பல வெளிநாடுகளுக்கும் பயணம்மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஜெர்மனி அதிபர்ஸ்ரேடரை சந்தித்து பேசினார்.
அப்போது காஷ்மீர் சட்டசபை வளாகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைஜெர்மனி வன்மையாக கண்டிக்கிறது. தீவிரவாதிகள் அமெரிக்கா மீது நடத்தியதாக்குதலையும், ஸ்ரீநகர் சட்டசபை வளாகத்தின் மீது நடத்திய தாக்குதலையும்ஜெர்மனி ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறது என்று ஜெர்மன் அதிபர் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம்கூறுகையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் பதவி ஏற்றபின் நிலவி வரும் சூழ்நிலைகுறித்தும் விவாதித்தார்கள்.
பிரதமர் வாஜ்பாய் ஜெர்மன் அதிபரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்புவிடுத்திருந்தார். அதை ஜெர்மன் அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் வாஜ்பாயைசந்திக்கும் நாளை தான் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் ஜெர்மன் அதிபர்கூறினார்.
ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஜஸ்வந்த் கூறுகையில், இந்தியா கடந்த 20ஆண்டுகாலமாக தீவிரவாதத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது. தீவிரவாத்தைஒழிப்பதில் பாகுபாடு இருக்கக்கூடாது.
ஸ்ரீநகர் சட்டசபை வளாகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்வேண்டுமென்றே, இந்தியாவை கோபமூட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல். இதுஇந்தியாவின் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.
அமெரிக்க நகரங்கள் மீது நடத்தப்பட் தாக்குதலுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மீதுஎடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications