குடிபோதையில் கார்டு... தாமதமானது ரயில்
சென்னை:
மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயிலில் குடிபோதையில்மயங்கி கிடந்த கார்டு இறக்கிவிடப்பட்டுவேறு கார்டுடன் ரயில் பயணத்தை தொடர்ந்ததது.
புதன்கிழமை மேட்டூரிலிருந்து சென்னை நோக்கி சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயிலில் காலி சரக்குபெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த ரயிலின் கார்டாக கிருஷ்ணபிரசாத் என்பவர் இருந்தார். சரக்கு ரயில் வழியில் வரும் எந்த ஸ்டேஷனிலும்நிற்காது என்றாலும், ஒவ்வொரு ஸ்டேஷன் வரும் போதும் எஞ்ஜின் டிரைவருக்கு பச்சை சிக்னல் காட்டவேண்டியது கார்டின் கடைமை.
ரயில் கிளம்பிய சிறிது நேரம் கழித்து வந்த சில ஸ்டேஷன்களில் சிக்னல் காட்டிய கிருஷ்ணபிரசாத், பின் சிக்னல்எதையும் காட்டவில்லை. ரயில் டிரைவரும் கார்டின் சிக்னல் இல்லாமல் ஜோலார்பேட்டை வரை ரயிலை ஓட்டிவந்துவிட்டார்.
கார்டு ஏன் சிக்னல் காட்டவில்லை என்ற சந்தேகப்பட்ட டிரைவர் ஜோலார்பேட்டையில் ரயிலை நிறுத்திவிட்டு கார்டுஇருக்கும் பெட்டியை சென்று பார்த்தார். அங்கு கார்டு குடிபோதையில் மயங்கி கிடப்பதை பார்த்து, இனிமேலும்இவருடன் ரயிலை ஓட்ட முடியாது என்று உணர்ந்த டிரைவர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சரக்கு ரயில் நிற்கும் இடத்திற்கு வந்து குடிபோதையில் மயங்கி கிடந்தகிருஷ்ணபிரசாத்தை எழுப்பினர். கிருஷ்ண பிரசாத் கண்விழித்து பார்த்து குடி மயக்கத்திலேயே அதிகாரிகளுக்குவணக்கம் தெரிவித்தார்.
அவரின் நிலையே புரிந்து கொண்ட அதிகாரிகள் அவரை ஜோலார்பேட்டையிலேயே இறக்கிவிட்டனர். வேறு ஒருகார்டை நியமித்தனர். இதையடுத்து ரயில் தன் பயணத்தை தொடர்ந்தது.
இதனால் 2 மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது அந்த சரக்கு ரயில்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications