வெடித்துச் சிதறிய ரஷ்ய விமானத்தின் காக்பிட் மீட்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிவ்:

இஸ்ரேலிலிருந்து சைபீரியா நோக்கி சென்று கொண்டிருந்த போது வெடித்துச் சிதறியரஷ்ய விமானத்தின் விமானி அறையை (காக்பிட்) மீட்பு பணியாளர்கள்கண்டுபிடித்துள்ளதாக ரஷ்ய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) ரஷ்ய ஜெட்விமானம் டி.யூ 154 இஸ்ரேல் தலைநகரானடெல்அவிலிலிருந்து சைபீரியா நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் 64பயணிகளும், 12 விமான பணியாளர்களும் இருந்தனர். அந்த விமானம் கருங்கடலின்மேல் பறந்து கொண்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் விமானத்திலிருந்த அனைவரும் இறந்து விட்டனர். விமானம் வெடித்து விழுந்தகருங்கடல் பகுதியில் மீட்பு பணியில் ரஷ்ய கடற்படையின் மீட்பு குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில் மீட்பு பணியாளர்கள் விமானத்தின் காக்பிட்டை கண்டு பிடித்திருப்பதாகரஷ்ய கடற்படை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.

இந்த சிதறிக் கிடந்த காக்பிட் ரஷ்யாவின் தெற்கு துறைமுகமான சோச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உக்ரைன் ஏவுகணை தாக்கியதா?

முன்னதாக இந்த விமானத்தை தவறுதலாக உக்ரைன் கடற்படையினர் ஏவுகணையைக்கொண்டு தாக்கி சிதறடித்ததாக செய்திகள் வெளியாயின.

கருங்கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் கடற்படையினர்தவறுதலாக இந்த விமானத்தை வீழ்த்திவிட்டதாக உக்ரைன் நாட்டு கடற்படை அதிகாரிஒருவர் கூறினார்.

ஆனால், இதை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக மறுத்துவிட்டது.உக்ரைனின் கடற்படை செய்தி தொடர்பாளர் நிகோலாய் சாவ்சென்கோ ஏ.எப்.பி.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

விமானம் வெடித்துச் சிதறியது உக்ரைனின் ஏவுகணை தாக்குதலால் அல்ல. விமானம்பறந்து சென்ற பகுதி ஏவுகணை தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாகும்.

உக்ரைனின் ஏவுகணைகள் குறிப்பிட்ட பகுதியையே சென்று தாக்கின. அவை ரஷ்யவிமானத்தை தாக்கவில்லை என்றார்.

மேலும் விமானம் கடலில் விழுந்தவுடன் மீட்புப் பணியில் முதலில் ஈடுபட்டது உக்ரைன்கடற்படை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைன் ஏவுகணைகள் ரஷ்யவிமானத்தை தாக்கியிருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் இவ் விஷயத்தில் உடனடியாகஉறுதியாக எதையும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற